தோட்டத்தொழிலாளர்களுக்கு லயன் வீடுகளுக்கு பதிலாக மாடி வீடுகளை அமைக்கும் திட்டம்.


 

தோட்டப்பகுதிகளில் லயன் குடியிருப்புக்களில் வாழும் குடும்பங்களுக்காக இலவசமாக வீடுகளை வழங்கும்

வேலைத்திட்டம் தரணியகல மாலிம்பொடயில் நாளை ஆரம்பமாகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


இந்திய அரசாங்கம் இதற்கான நிதியுதவியினை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 170 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. புதிய வீடுகள் இரண்டு மாடிகளை கொண்டதாக அமையவுள்ளன.


இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும். மாலிம்பொட வீடமைப்புத்திட்டத்திற்காக 510 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு லயன் வீடுகளுக்கு பதிலாக மாடி வீடுகளை அமைக்கும் திட்டம். தோட்டத்தொழிலாளர்களுக்கு லயன் வீடுகளுக்கு பதிலாக மாடி வீடுகளை அமைக்கும் திட்டம். Reviewed by Madawala News on March 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.