நாடு முழுவதும் காதி பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

 


நாடு முழுவதுமுள்ள 25 பிரதேசங்களில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின்

கீழ் காதி பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கடந்த 1 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.


குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 40 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் குடிமகன் ஒருவர்இ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டதாரியாக அல்லது முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றிருப்பது இந்த பதவிக்கு தகுதிகளாக கருதப்படுகின்றது.


காதியார் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ .7,500 கொடுப்பனவுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர் சேவை, எழுதுபொருள் மற்றும் தபால்களுக்காக அதிகபட்சம் ரூ .6,250 கொடுப்பனவுகளுடன், ரூ .13,750 மாதச் சம்பளமாக வழங்கப்படும்.


குறித்த காதி பதவியின் விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம்மாதம் 31 திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விண்ணப்பங்கள் பற்றி நீதித்துறை சேவை ஆணையம் தேசிய செய்தித்தாள்களில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.


இருப்பினும், சமீப காலமாக காதி நீதிமன்றில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சமூகத்தில் நிலவி வந்ததுடன், இவ்வாறான நிலைமையில் காதி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் காதி பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.  நாடு முழுவதும் காதி பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.