உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சி விசாரணைகள் நிறைவு பெற்றன.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குவின் சாட்சி

விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் நேற்று (19) இவ்வாறு சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


எதிர்வரும் சில தினங்களில் அவர் சாட்சி வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்த உமர் மொஹமட் எனும் நபர் நேற்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.


தடுப்பு காவலிள் வைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணைகளுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.


குறித்த நபர் சாட்சி வழங்கியதன் பின்னர் சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சி விசாரணைகள் நிறைவு பெற்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சி விசாரணைகள் நிறைவு பெற்றன. Reviewed by Madawala News on January 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.