இன்றைய வானிலை அறிக்கை விபரம்.



மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப் பிரதேசங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப்பிராந்தியங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்

நாட்டின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆனபடியினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் இப்பிரதேசத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் .

கொழும்பு தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப் பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற வேளைகளில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 70_80 km இலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

இன்றைய வானிலை அறிக்கை விபரம். இன்றைய வானிலை அறிக்கை  விபரம். Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.