ஹிறா பௌண்டேஷனுக்கு கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய், காத்தான்குடியில் ஏன் பேரீத்தம் பழ மரங்கள் உட்பட கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கம்.



ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும்
 ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ் (23.11.2020) முன்னிலையாகி அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியம் வழங்கினார்.

சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனுக்கு தொடர்பான முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கையில், சிறீலங்கா ஹிறா பவுண்டேஷன் இலங்கை அரசாங்கத்தில் சமூக சேவை திணைக்களத்திலே உத்தியோகபூர்வமாக 1993 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு என்றும், இந்த அமைப்பு இந்த நேரம் வரையிலும் யாராலும் ரத்து செய்யப்படவில்லை எனவும், இந்த அமைப்பை பாராளுமன்றத்தில் கூட்டிணைத்து ஏனைய அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்வதற்கு முனைந்தது மேலும் பலப்படுத்துவதற்காகவே அன்றி சிறீலங்கா ஹிறா பௌண்டேஷன் பெயரில் எந்தப் பிரச்சினையும் கிடையாது.

இன்று வரைக்கும் சிறீலங்கா ஹிறா பௌண்டேஷன் இலங்கை அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனுக்கு பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கூடாக கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய்களும் முழுமையாக செலவு செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் தேசிய இறைவரித் திணைக்களம்,வருமானவரித் திணைக்களம், CID, FCID ஆகியவற்றினால் விசாரணை செய்யப்பட்டு தெளிவு காணப்பட்டிருக்கிறது.

ஹிறா பவுண்டேஷன் மூலமாக இதுவரையில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஒரு அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி பொலநறுவை, சிகரம், ஒல்லிக்குளம், மண்முனை போன்ற பல்வேறுபட்ட கிராமங்களில் வீட்டுத் திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். மக்களுக்காக குடி நீரை வழங்கி இருக்கிறோம். இது போன்ற பல்வேறுபட்ட பணிகளை இந்த அமைப்பினுடாக மக்களுக்காக செய்து இருக்கிறோம் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில், காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் பாயிஸ் என்பவர் ஒரு ஆயுதக் குழுவிற்கு தலைமை தாங்கினார். அவருக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேரடியாக ஆதரவு வழங்கி,பாதுகாப்பு வழங்கி அரசியல் செல்வாக்கு செலுத்தியதால் தான் அவரை என்னால் கைது செய்ய முடியவில்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் எபிசன் குணதிலக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் மீது வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கின்ற போது பொலிஸ் பாயிஸ் என்பவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, பொலிஸ் பாயிஸ் இன்று வரையிலும் எனது எதிரியாகவே இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்திலே எனக்கு எதிராக மிக கடுமையாக எழுதி வருகின்ற ஒருவர். எனவே தான் அவரை பாதுகாக்க எந்த சந்தர்ப்பங்களிலும் நான் முன் நிற்கவில்லை. அவர் அரசியலிலே எனக்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்ட ஒருவர். எனவே இது எனக்கு எதிராக வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேற்று ஜனாதிபதி ஆணக்குழுவிலே சாட்சியம் அளித்தார்.

காத்தான்குடியில் பேரீச்சை மரத்தை நாட்டி , கலையம்சங்களை வளர்த்து காத்தான்குடியை அரபு நாட்டு சாயலிலே அபிவிருத்தி செய்தது நீங்கள் அரபு நாட்டினுடைய ஒரு அங்கமாக காத்தான்குடியை வைத்திருப்பதற்காகவா? என ஆணைக்குழுவில் வினவிய போது அதிலே எந்த வித உண்மையும் கிடையாது, அவற்றை நான் செய்தது அரபு நாட்டு அங்கமாக இருப்பதற்கல்ல அரபு நாட்டில் இருந்து வருகின்ற உல்லாசப் பிரயாணிகளைக் கவருவதற்காகவும் மேலும் பாசிக்குடாவுக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கு எந்த வித பொழுது போக்குகளும் இல்லை அவர்களை காத்தான்குடிக்கு வரவழைத்து அவர்களுக்கு இஸ்லாமிய சூழலை ஏற்படுத்துவதனுடாக உல்லாசத்துறையை முன்னேற்றுவதற்காகவும், குறிப்பாக அரபு உல்லாசப்பிரயாணிகளை கவர்வதற்காவே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியம் அளித்தார்.

மேலும் பேரீச்சை மரம் நாட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது காத்தான்குடியிலே பேரீச்சை மரத்திற்கு பதிலாக fox tail என்ற மரம் தான் நாட்டுவதற்காக இருந்தேன். ஆனால் காத்தான்குடியின் உஷ்ணமான காலநிலைக்கு, காபட் வீதிக்கு மத்தியிலே நாட்டுவதால் மரங்கள் இறந்து விடும் என்பதனால் மிக உறுதியான மரமாக பேரீச்சை மரம் நாட்டுமாறு அறிவுரை சொல்லப்பட்டமையால் இலங்கைக்குள் இருந்த பேரீச்சை மரங்கள் கொண்டு வரப்பட்டு அவை காத்தான்குடியிலே நாட்டப்பட்டதே தவிர அரபு மயப்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை என மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி அப்ரார் பிரதேசத்திலே தந்தையை இழந்து வறிய நிலையிலே பல பிள்ளைகளோடு வாழ்ந்து வருகின்ற பல வறிய குடும்பங்களுக்காக மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற மாதாந்த கொடை தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரித்த போது தந்தையை இழந்து இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளோடு எந்த வித வருமானமும் இல்லாமல் இருக்கின்ற விதவைப் பெண்களுக்கான அந்தக் குடும்பங்களுக்காகவே நாங்கள் மாதாந்தம் 7500 ரூபா வீதம் வழங்கி வருகின்றோம். எனவே இது சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனால் வழங்கப்படுகின்ற ஒரு உத்தியோகபூர்வமான கொடுப்பனவு. இது தொடர்பாக நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அவர்களது கணக்கிலே பணத்தினை வைப்பிலிடுகின்றோம் என்றும் இது தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் ஜனாதிபதி ஆணைக்குழுவிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேற்று பதிலளித்தார்.

காத்தான்குடியில் இயங்குகின்ற இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் ஒரு தீவிரவாதத்தை போதிக்கின்ற ஒரு அமைப்பு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கேட்ட போது இல்லை அது தீவிரவாதத்தை போதிக்கின்ற நிறுவனம் அல்ல மாறாக மார்க்க அனுஷ்டானங்களையும், மார்க்கக் கல்வியையும் போதிக்கின்ற நிறுவனமே தவிர இது எந்த வகையிலும் தீவிரவாதத்தை போதிக்கின்ற நிறுவனம் அல்ல , தீவிரவாதத்தோடு தொடர்புபட்ட நிறுவனமும் அல்ல , அவற்றோடு ஈடுபடவும் இல்லை அதற்கான ஆதாரங்களும் இல்லை. ஆகவே இது மத அனுஷ்டானங்களை மாத்திரம் போதிக்கும் நிறுவனம் என்பதை மிக உறுதியாக தெரிவிப்பதாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களும் பொறியிலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் தேசிய தௌஹீத் ஜமாஅத் கட்டடத்தில் சஹ்றான் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இடம் பெற்ற ஒளிநாடாவை போட்டுக்காட்டி இது தொடர்பாக உங்களுக்கு ஆதரவாக சஹ்றான் பேசுகிறார் என்று விசாரணை இடம்பெற்ற போது இது தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னை தோற்கடிப்பதற்காக ஒரு ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். அதுவே இக்கூட்டமாகும். அதில் சிப்லி பாரூக் மற்றும் அப்துர் ரஹ்மான் அவர்கள் இரண்டு பேரும் இல்லை இவருக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டிலே இருந்து வந்து தேர்தலுக்காக செலவளிக்கின்றார் என்று கூறி இதை வைத்து இவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து இவரை தோற்கடிக்கலாம் என்று சொன்ன போது அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது , ஆதாரம் இல்லாமல் நாம் கூற முடியாது, ஆதாரம் இருந்தால் தான் கூற முடியும் , மேலும் தேர்தலுக்காக வெளிநாடுகளில் இருந்து அவருக்கு பணம் வந்தால் கூட அதை நாம் குறை கூற முடியாது என்று சொல்கிறார்களே தவிர எனக்கு ஆதரவாக பேசியது கிடையாது. என்னை தோற்கடிக்க கலந்துரையாடப்பட்ட கூட்டத்திலே பேசப்பட்ட விடயம் என்று மிகத் தெளிவாக சொன்னதோடு எனக்கும் சஹ்றானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை தோற்கடிக்கவும் எனது அரசியலிலும் மிக கடுமையாக எதிர்த்தவர். எந்த சந்தர்ப்பத்திலும் சஹ்றானைப் பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்திலும் முயலவில்லை என்றும் அவர் இறுதி வரை எனக்கு எதிராகவே செயற்பட்டார் என்று மிக உறுதியாக நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் குறிப்பிட்டார்.

மேலும் நேற்றும் (24.11.2020) கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் சாட்சியம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது
ஹிறா பௌண்டேஷனுக்கு கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய், காத்தான்குடியில் ஏன் பேரீத்தம் பழ மரங்கள் உட்பட கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கம். ஹிறா பௌண்டேஷனுக்கு கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய், காத்தான்குடியில் ஏன் பேரீத்தம் பழ மரங்கள் உட்பட கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கம். Reviewed by Madawala News on November 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.