பட் ஜெட் 2021 அப்டேட்ஸ்.. 🔴 UPDATING


பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் 2021 ஆம்
 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தபோது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அடுத்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்படுமென்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

04:46 PM
காடழிப்பு முயற்சிகளைத் தடுப்பதற்கு இலங்கை விமானப்படை கண்காணிப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

04:44 PM
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் சமூர்த்தி கடைகள் நிறுவ ரூ .1000 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு


04:40 PM
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக நீட்டிக்கப்படும்.

04:38 PM
அரசு ஊழியர்களுக்கும் வெளிநாட்டு கல்வி அல்லது வேலைக்கு இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை 


04:34 PM
வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிதிச் சட்டத்தில் திருத்தங்கள் முன்மொழிவு



04:33 PM
நீதித்துறை சேவைகளுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது


04:30 PM
வங்கி சாரா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைக்கு வலுவான கட்டமைப்பை உருவாக்க புதிய விதிகள்


04:29 PM
கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் இலங்கையின் முக்கிய நகரங்களில் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். 


04:22 PM

கட்டுமானத் துறை தொடர்பான தொழிலாளர்களை தொழிற்பயிற்சி நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை


04:19 PM
புடவை மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வரி நிவாரணம் முன்மொழியப்பட்டது. 


04:11 PM
உள்ளூர் விவசாய தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்


04:09 PM
இரத்தினக்கல் ஏற்றுமதியில் மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு

* 25 பில்லியனிற்கும் அதிகமான மாதாந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தற்போதைய 8 வீத வட் வரி தொடரும்

* வரிகள் தொடர்பான மக்களின் குறைபாடுகளை விசாரணை செய்வதற்கு புதிய மேல்முறையீட்டு
நீதிமன்றம்

* இலங்கையின் வரிவருமானத்திற்கு 50 வீதத்திற்கும் மேல் பங்களிப்பு செய்யும் சிகரெட்,தொலைத்தொடர்பு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றிற்கு விசேட பொருட்கள் சேவைகள் வரி

* வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இலங்கையில் ஆடம்பர தொடர்மாடிகளை கொள்வனவு செய்ய அனுமதி

* நாடு முழுவதும் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன. ரூ. 3,000 மில்லியன் உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்பதன் அடிப்படையில் தொழிற்கல்வி பெறும் மாணவர்களுக்கு ரூ.4,000 மாதாந்திர கொடுப்பனவு

* ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1,400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்கள் பெறப்பட உள்ளன.

* கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு 2021 டிசம்பர் 31 வரை 50% வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

* குருகெதர கல்வித் திட்டங்களை மாணவர்கள் பார்க்க கிராமப்புற பாடசாலைளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. ரூ .3,000 மில்லியன் ஒதுக்கீடு

* கொவிட் பாதிக்கப்பட்ட துறைகளின் ஊழியர்களுக்காக புதிய காப்பீட்டு திட்டம்.

* நாடு முழுவதும் 4ஜி கவரேஜ் வழங்கி டிஜிட்டல் இலங்கையை உருவாக்க 15,000 மில்லியன் முதலீடு செய்ய திட்டம்.

* சமூக பாதுகாப்புக்காக சிறப்பு பொலிஸ் வாகனங்கள்

* தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக ரூ .8 பில்லியன்

* வழக்கமான வீட்டு சந்தையை ஊக்குவிக்க வருமான வரி விலக்கு.

* தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு. ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

* வருமான வரி செலுத்துவோருக்கு எளிய ஒன்லைன் வருமான முறை

* புதிய நிறுவனங்களைத் தொடங்க இளைஞர்களுக்கு கடன் வழங்க நிதி

03:59 PM
இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம்
 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும்.


03:57 PM
புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை 1000 மெகாவோட்டாக அதிகரிக்க முன்மொழிவு


03:57 PM
கொழும்பு மற்றும் களனிவெளி ரயில் பாதை விரிவாக்கம் மற்றும் வீதி அபிவிருத்திக்கு 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு



03:55 PM
2021-2023 க்கு இடையில் தேசிய மின்கட்டமைப்பில் 1000 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும்.


03:54 PM
2021-2022 ஆண்டுகளில் தடை இல்லாத மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க லக்விஜய மற்றும் கேரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்கள் வலுப்படுத்தப்படும்


03:53 PM
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை. இதற்காக 1000 பில்லியன் ஒதுக்கீடு

3:46 PM
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த யோசனை

03:45 PM
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 2021 ஜனவரி 1 முதல் ரூ .1000 ஆக உயர்த்த முன்மொழிவு..

03:42 PM
பால் பண்ணை அபிவிருத்திக்கு ரூ. 500,000 கடன் வழங்க முன்மொழிவு...



03:40 PM
உள்ளூர் மீன்பிடி மேம்பாட்டுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


03:39 PM
சாகுபடி உதவி திட்டம் முன்மொழிவு


03:39 PM
நெல் உற்பத்திக்கான உரத்தை இலவசமாக வழங்கவும், மற்ற பயிர்களுக்கு ரூ .1500 ரூபாய் வீதம் வழங்க திட்டம்


03:37 PM
விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.


03:36 PM
மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை


03:35 PM
திறமையான தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், வேலைக்கு வெளிநாடு செல்வோருக்கு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.


03:34 PM
கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

-தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல்
 முதலீடுக்கு கவனம். ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


02:41 PM
தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் இணைப்பு தற்போது 100,000 ஆக உள்ளது, இது வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்.



02:40 PM
50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். முதலாளியின் பங்களிப்பு 0.25 சதவீதமாக இருக்கும்.


02:38 PM
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு வலயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


02:35 PM
ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடீபீ) , ஜெய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற அரசாங்கம் எதிர்பார்க்கிறது



02:34 PM
கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


02:33 PM
தொழில்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை



02:31 PM
கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம். அவர்களது போஷாக்கினை மேம்படுத்த நடவடிக்கை. திரிபோஷா உற்பத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
கர்ப்பிணிகளுக்கு மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக திரிபோஷா வழங்கப்படும்.


02:30 PM
ஹோட்டல், சிறு வியாபார நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கும் காப்பீடு திட்டம்.

டிஜிட்டல் இலங்கையை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம். 100 வீத 4G திட்டத்தை முழு நாட்டிற்கும் கொண்டு சேர்ப்பது, இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படும்.


மக்கள் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் சேவை - இதற்காக 2500 மில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு.

 
முப்படைகளின் அபிவிருத்தி மற்றும் தொழிநுட்ப, அடிப்படை தேவைகள் குறித்த குறுகிய மற்றும் இடைக்கால தேவைக்காக மேலதிகமாக 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.


இந்துசமுத்திரத்தில் எமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.


போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்தவும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களின் மையமாக இந்த நாட்டினை பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தியாக வேண்டும். 


நாட்டின் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படையை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முப்படைகளின் திறன்களைக்கூட்டவும், நவீன தொழிநுட்பங்களை பெற்றுக்கொடுக்கவும் இடைக்கால வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும். 



பல்வேறு நிறுவனங்களினால் சட்டத் தன்மைகளுக்கு கட்டுப்பட்டு முன்னெடுக்கப்படும், மதுபானம், சிகரெட், சூதாட்டம் என்பவற்றிற்கு 50 வீதத்திற்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவை வரி அறவிடப்படும். 


வரிக்கொள்கையில் மாற்றமில்லை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டுக்கான வரிக்கொள்கையைப் பின்பற்றி பொருளாதாரத்தை முன்னெடுப்போம். 


மாதம் 25 மில்லியனுக்கு அதிகமான வியாபாரத்திற்கு 8 வீத வற்வரி அறவிடப்படும்.
அரச வருமானம் மற்றும் அரச செலவுக்கு இடையிலான நூறுக்கு 7 வீத இடைவெளியை 4 வீதத்திற்கு குறைக்க நடவடிக்கை எடுப்போம்.


தேசிய வருமானத்தில் உள்ள 90 வீத அரச கடன்களை 70 வீதமாக குறைக்கவும், சர்வதேச கடன்களை குறைத்துக்கொள்ளவும் கவனம் செலுத்தப்படும். 


மக்களை சார்ந்த அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பாகும், கடந்த காலங்களைப் போன்று இல்லாது பொறுப்புக்கூறலுடனும் வீண் விரயமற்ற அரச சேவையை உருவாக்குவோம், அரச சேவையாளர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் கண்டிக்கிறோம். 


இறக்குமதி வர்த்தகத்தை விடுத்து முழுமையான விவசாய மற்றும் கமத்தொழில் உற்பத்தியை முதன்மைப்படுத்திய பொருளாதாரமே எமது நோக்கமாகும். 


கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து எமது மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதே எமது முக்கிய நோக்கமாக உள்ளது.
 

2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன்ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்படவுள்ளது.



ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான ஒதுக்கீடாக 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.



புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, 


முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, 

கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, 

இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சிற்கு 15246 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


வெகுசன ஊடக அமைச்சிற்கு 519 கோடியே 21 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா, அதனுடன் கூடிய தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு 1575 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சிற்கு 1975 கோடியே 38 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சிற்கு 1038 கோடியே 89 இலட்சத்து 61ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.



சுகாதார அமைச்சிற்கு 15947 கோடியே 59 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா, சுதேசவைத்திய, ஆயுர்வேத, மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சிற்கு 264 கோடியே 90 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு 1284 கோடியே 94 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா, 


பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சிற்கு 16 கோடியே 75 இலட்சம் ரூபா, போக்குவரத்து அமைச்சிற்கு 4140 கோடியே 90 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.



வலுசக்தி அமைச்சிற்கு 25 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபா, வர்த்தக அமைச்சிற்கு 562 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 33018 கோடியே 50 இலட்சத்து ஐயாயியம் ரூபாவும், மின்சக்தி அமைச்சிற்கு 31 கோடியே 29 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


காணி அமைச்சிற்கு 832 கோடியே 80 இலட்சம் ரூபா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு 172 கோடியே ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா, கல்வி அமைச்சிற்கு 12654 கோடி ரூபா, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு 3045 கோடியே மூன்று இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு 27172 கோடியே 30 இலட்சம் ரூபா,பெருந்தோட்ட அமைச்சிற்கு 128 கோடியே 98 இலட்சம் ரூபா, கடற்தொழில் அமைச்சிற்கு 458 கோடியே 41 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


சுற்றுலாத்துறை அமைச்சிற்கு 185 கோடியே 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா, சுற்றாடல் அமைச்சிற்கு 199 கோடியே 71 இலட்சம் ரூபா,விளையாட்டுத்துறை அமைச்சிற்கு 1092 கோடியே 76 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சுருக்கம் மேலுள்ள விடயங்கள்.



பட் ஜெட் 2021 அப்டேட்ஸ்.. 🔴 UPDATING பட் ஜெட் 2021 அப்டேட்ஸ்.. 🔴  UPDATING Reviewed by Madawala News on November 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.