தனிமைப்படுத்தலை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை! DIG அஜித் ரோஹன



தனியார் மற்றும் அரச பஸ்களின் இலக்கங்களை பயணிகள்
 பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது பயணிகளும் தாங்கள் பயணித்த பஸ்களின் இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்கள் அந்த அறிவித்தலுக்கமைய செயற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. அதனால், இவ்வாறு தனிமைப்படுத்தல் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள வீடுகளில் கிராமசேவகர், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தையும் காட்சி படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன்போது, அந்த வீடுகளில் இருப்பவர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் உரிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.

மேலும் தனிமைப்படுத்தல் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளதைபோன்று, வெளிநபர்கள் குறித்த வீடுகளுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் யாராவது ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை பிடியாணை உத்தரவு இன்றி கைது செய்வதற்கும் அனுமதியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை! DIG அஜித் ரோஹன தனிமைப்படுத்தலை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை! DIG அஜித் ரோஹன Reviewed by Madawala News on October 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.