மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.... பொதுமக்களின் பொறுப்பு!



எம்;.எம்.ஏ.ஸமட்
உலகளவில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலடைந்தது தொடர்பில்; அமெரிக்காவுக்கும் சீனாவுக்;குமிடையே பரஸ்பர வாதப் பிரதிவாதங்கள்; தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.  இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் உலகளவில் கிடைப்பனவாவதை சாத்தியமாக்குவது தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளதுவெனவும் இந்த விவகாரத்தை ஒன்றாக இணைந்து நீந்திக்கடக்காத பட்சத்தில் நாம் மூழ்க நேரிடும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ரெட்ரொஸ் அதானொம்  கப்பிறியெஸஸ் தெரிவித்திருக்கிறார். 

இச்சந்தர்;ப்பத்தில,; சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் கடந்த 2019 டிசம்பர் மாதம் பரவலடைய ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின்  அனைத்துக் கண்டங்களையும் வியாபித்து 35.8 மில்லியனுக்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ளமை பதிவாகியுள்ளது. அத்துடன் 1.05 மில்லியனுக்கும் அதிகமானோர் உலகளவில் இக்கொரோனா வைரஸ் தொற்றினால் உயிர் இழந்துள்ளனர். கொரோன வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக தற்போது வல்லரசான அமெரிக்காவும் நமது அண்டை நாடான இந்தியாவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் முதலாவது இலங்கைப் பிரஜை கடந்த மார்ச் மாதம்  இந்நோய் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டது முதல் இந்நாடு கொரோ வைரஸின் பாதிப்பை எதிர்கொண்டது. பல்வேறு அசௌகரியங்களை நாடும் மக்களும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. வாழ்வியலும் வாழ்வாதாரமும்; பாதிக்கப்பட்டு மக்களின் பொருளாதார நிலை கீழ் மட்டத்தை நோக்கி நகர்ந்தது.; கொரோன அச்சம் மக்களை ஆட்கொண்டிருந்த இவ்வாண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் கடும்போக்காளர்களும், இனவாதிகளும் கொரோனா பரவலக்கும் முஸ்லிம்களுக்கும் முடிச்சுப்போடும் செயற்பாடுகளை தங்கள் சார்பு ஊடக ஊதுகுழல்கள் மூலம் முன்னெடுத்தiமை நினைவுக்கு வருகிறது.  அதை தற்போதும் எத்தனிக்க முனைவது வேதனையளிக்கிறது. 


மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா 

இலங்கையில் கொரோனா தொற்று சமூகப் பரவல் அடையாமல் தடுப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை வினைத்திறன்மிக்க பொறிமுறைகளினூடாகவும், பல்வேறு தியாகங்களினூடாகவும் சுகாதாரத்துறையினரதும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்த நடவடிக்கைகளின் வாயிலாக கொரோன வைரஸ் உலகின் ஏனைய நாடுகளைப் பாதித்த அளவிற்கு இலங்கையை பாதிக்காது காப்பாற்றப்பட்து. ஆதலால், கடந்த ஜுன் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து இப்பாதிப்பிலிருந்து மக்கள் படிப்படியாக  மீள ஆரம்பித்தனர். தங்களது தொழில் துறைகளை மீளவும் ஆரம்பித்து வாழ்வியலுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி பொருளியலை ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 


இதனால், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றிணைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச  ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. கொவிட் 19 தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட உலகின் 108 நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம் கிடைத்த வெற்றிப் பூரிப்பு மறைவதைற்கிடையில் மீண்டும் கொரோவின் அச்சுறுத்தலை இத்தேசம் எதிர்நோக்கயிருக்கிறது. மினுவான்கொடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்னொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொழிற்சாலையில் பணிபுரிவோர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.  இந்நோய்தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதற்கும் இந்நோய்தொற்று சமூகப் பரவல் அடைவதைத் தடுப்பதற்கும் தனிப்மைப்படுத்தல ;ஊரடங்குச் சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டு வருகின்றனர். 



இந்நோய்தொற்று சமூகப் பரவல் அடைவதைத்தடுப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை உரிய தரப்புக்களுக்கு வழங்காத பட்சத்தில் இந்நடவடிக்கைகள் அனைத்தும் முயல்கொம்பு நிலையாகவெ காணப்படும் ஆதலால், பொதுமக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவது அவசியமாகும். பாதுகாப்புப் படையினராலும், சுகாதாரத்துறையினராலும் விடுக்கின்ற அறிவிறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கவனத்திற்கொண்டு செயற்படவேண்டிய பொறுப்பை பொதுமக்கள் சுமந்திருக்கிறார்கள். கொரோனா பரவல் தொடர்பில் வழங்கப்படுகின்ற அறிவறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் உதாசினம் செய்ய முற்படும் பட்சத்தில் அவை ஆபத்துக்கே வழிகோலும் என்பதை ஒவ்வொரு நாட்டுப் பிரஜையும் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.


ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படவில்லை. இருப்பினும் வைரஸ் தொற்றின் அபாhயம் முற்றாக நீங்காத நிலையில் இது தொடர்பில் சுகாதாரத்துறையினர் மக்களை அடிக்கடி விழிப்பூட்டியும் எச்சரித்தும் வந்தனர். இருந்தபோதிலும், இந்த எச்சரிக்கைகளையும,; விழிப்புணர்வுகளையும் மக்கள் எந்தளவுக்கு பின்பற்றினர் என்பது கேள்விக்குறியாகும். மினுவான்கொடையில் கொத்தணி தொற்று ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர். சுகாதார அமைச்சின் தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இவ்வாறான எச்சரிக்கையொன்றை நாட்டுமக்களுக்கு விடுத்திருந்தார். அதாவது, கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இன்னும் குறைவடையவில்லை. அவதானம் குறைந்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும். அதனால், அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளை மறந்து கவனயீனமாக செயற்படக் கூடாது. அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வழியுறுத்துகிறோம். சட்டத்தின் மூலம் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றச் செய்வது நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.  மக்களின் ஒத்துழைப்பே வரைஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்து சில நாட்களில் மீண்டும் கொரோனா வைரஸ் சமூகப்பரவல் அடைந்திருக்கிறது. 

மக்களின் உதாசீனம்.


உலக வல்லரசு நாடுகள் உட்பட வறிய நாடுகள் வரை இந்த  வைரஸ் பரவலைத் தடுக்க முடியாமல் திணறிய சந்தர்ப்பத்தில் நம்நாட்டில் கொரோனா வைரஸ் சமூகப்பவரல் அடையாது தடுக்கப்பட்டது.; சுகாhரத்துறையினர் வைரஸ் தொற்றின் அச்சம்  தொடர்பில் அடிக்கடி மக்களை வலியுறுத்தி வந்தபோபோதிலும்  இவ்வைரஸ் தொற்று ஒன்று நாட்டில் இல்லை என்ற மனோநிலையிலேயே செயற்பட்டனர். எந்வொரு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. சாதாரண மக்கள் மாத்திரமின்றி சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று வழியுறுத்துக்கின்ற பலரும் இந்நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை. இதன் விளைவுகளை இப்போது அனுபவிக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. கொத்தணி தொற்று ஏற்பட்ட மினுவாங்கொடை உட்பட கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில்; தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 


இதனால், அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இப்பிரதேச மக்களின் வாழ்வாதரமும் பாதிப்படைந்திருக்கிறது.  பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அரச மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே பரஸபரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைத் தினத்திற்கு முன்னமே மூடவேண்டி ஏற்பட்டுள்ளது. 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் நடாத்தவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. மக்கள் சேவை பெறும் அரச நிறுவனங்கள் பல தற்காலிகமாக சேவைகளை நிறுத்தியுள்ளன. இவ்வாறு பல அசௌகரியமான அசாதாரண சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இவற்றிற்குக் காரணம் ஒவ்வொரு நாட்டுப் பிரஜையும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுவதில் உதாசீனமாக செயற்பட்டமை என்பது வெளிப்படை 

சுகாதார வழிகாட்டல்கள்


இந்நோய் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு பல்வேறு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள், தடுப்பு நடவடிக்கைள் முன்வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையினர் பல சுகாதார நவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். சவர்;க்காரமிட்டு கைகளை தண்ணீரில் 20 செக்கன்களுக்கு நன்றாகக் கழுவுதல், சவர்காரமில்லாதவிடத்து கைகளைக் கழுவப் பயன்படும் தண்ணீர் கலக்காத திரவத்தை (ஹேன்ட் சனிடைர்)  பயன்படுத்துதல், கழுவாத கைகளுடன் கண்கள், மூக்கு, வாயைத் தொடாதிருத்தல், அடிக்கடி தொடுவதைத் தவிர்த்தல்,  இருமல், தும்மல் ஏற்படும்போது,  டிசுவை பயன்படுத்தல்,; உணவு உண்பதற்கு முன்பும் பின்னரும் கைகளைச் சுத்தமாக கழுவதல், சமூக இடைவெளியைப் பேணுதல், முகக் கவசம் அணிதல், நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து வைத்திசாலைகளை நாடுதல் போன்ற அடிப்படை சுகாதார நடடிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்விழிப்புணர்ப்புகளை தாமும் பின்பற்றி  ஏனையவர்களையும்; பின்பற்ற வலிறுயுத்துவது அவசியமாகவுள்ளது. 
இருப்பினும். வைரஸ் தொற்று சமூகப் பரவல் அடைந்துள்ள நிலையில் பொதுஜனங்களில் அறியாமையை வெளிப்படுத்துகின்ற சிலர் இந்நோய்ப் பரவல் தொடர்பாக அலட்சியமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.அரசங்கம் மற்றும் சுகாதாரத்துறையினரினால் வழங்கப்படுகின்ற  எத்தகைய அறிவுரைகளையும் சட்டங்களையும,; ஒழுங்கு முறைகளையும் கருத்திற்கொள்ளாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் ஆபத்தானதாவே அமையக் கூடும்.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாது பிரதேசங்களில் ஊதாரிகளாகச் தெரிகின்றவர்களும், சமூக இடைவெளிகளைப் பின்பற்றாது பொருட்களைக் கொள்வனவு செய்கின்றவர்களும் இந்நோய்தொற்றுக்குள்ளாக நேரிட்டால் நிலைமை என்னவாகும் என சிந்திக்க வேண்டியுள்ளது. 


இத்தகையவர்கள் இன்னும் தங்களது மனங்பாங்குகளை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை.  ;, பத்திரிகைகள், வானோலி, தொலைககாட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக சுகாதார அமைச்சு, பிராந்திய சுகாதாரப் பணிமனைகளினால் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை பேணிநடப்பதில் அதிளவில் அக்கறை கொள்ளப்பட்டாலும் சிலரினால் தொடர்ச்சியாக அலட்சியம் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.


கொரோனா வைரஸ் தொற்றானது அபிவிருத்தியடைந்த நாடுகளின் அரசியல், சமூக பொருளாதாரத்தில் மாத்திரமின்றி அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளினதும் அரசியல், சமூக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது. இச்சந்தர்;ப்பத்தில் கொரோனா வைரஸ்; தொற்றின் தாக்கம் பாடசாலை, பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளை மாத்திரமின்றி சமூக பொருளாதார, அரசியல் மத வழிபாட்டு நடவடிக்கைகளையும் பாதித்தித்திருக்கிறது. 


இதேவேளை, பல்லின சமுதாயத்தை கொண்ட மக்கள் வாழும் இந்நாட்டில் அவரவர் மத வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதும் கட்டுப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளது. மக்கள் ஒன்று சேரும் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் ; முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு சமயத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்களும், ஸ்தாபனங்களும் இந்நாட்களில் எவ்வாறு தத்தமது மத வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் பள்ளிவாசல்களில் எத்தகையை நடவடிக்கைகபள பின்னபற்ற வேண்டுமென வழியுறுத்தப்பட்டுள்ளன.


பள்ளிவாசல்களில் 50 நபர்கள் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டவாறு ஐவேளைத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நடத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை என்பன பள்ளிவசால் பரிபாலனசபைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்துடன், குறித்த நிபந்தனைகளைப் பின்பற்ற முடியாத நிலை இருக்குமானால் அவ்வாறான பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும்  வழியுறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பள்ளிவாலில் நுழையும்போது ஆள் அடையாளாம் காணத் தேவையான விபரங்களைப் பதிவு செய்தல், கைகளுவதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அணைத்து சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் கண்டிப்பான பேணப்படல் வேண்டுமெனவும் வழியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், குறிப்பிட்ட பணிப்புரைககள் மற்றும் வழியுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்புதாரிகளுக்கு எதிராக வக்பு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதனால் வீணான குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம் மக்கள் மீது சுமத்தப்படுவதைத் தடுப்பதில் பள்ளிவாசல்கள் பரிபாலனசபைகளும் மக்களும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயற்பட வேண்டுமென்பதை வழியுறுத்திப் பதிவிட வேண்டியுள்ளது. 


ஏனெனில், ஒரு சில இனவாத ஊடகங்கள் இக்கொத்தணிப் பரவலை முஸ்லிம் மக்கள் மீது சுமத்துவற்கு முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. இருப்பினும்  அம்முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் இக்கொத்தணிப் வைரஸ் பரவல் மேலும் சமூகப் பரவலடையாது தடுப்பதில் இந்நாட்டின் தேசிய இனம் என்ற ரீதியில் இந்நாட்டு முஸ்லிம்கள் சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரதும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவது முக்கிய கடப்பாடாகும். 

ஊடகங்களின் பொறுப்பு

இந்நிலையில்தான் கொரோனா கொத்தனி தொற்றுப் பரவலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் இந்நாடு கொரோனா தொற்றிலிருந்து முற்றாக விடுபடுவதற்கும் சுகாதாரத்துறையினரும், முப்படை மற்றும் பொலிஸாரும் இரவு பகல் பாராமல் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். இவர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் கௌரவப்படுத்துவதோடு கொரோனா ஒழிப்பின் முக்கிய பொறுப்பாளர்களான இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தங்களது ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும். ஆனால், இக்கொரோனைவைப் பயன்படுத்தி, அரசியல் இலாபமடைவதற்கும். தொழில் ரீதியான விளம்பரங்களை அதிகரித்துக் கொள்வதற்கும்,  சுயமாக பிரபல்யமடைவதற்கும் பேஸ்புக், வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களும்,;  ஒரு சில தனியார் ஊடகங்களும் இந்நாட்டில் இந்நோய்தொற்று ஏற்பட்ட காலங்களில் செயற்பட்டது போன்று செயற்படுவதற்கு முயற்சிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதுடன் சமூக ஊடக ஜாம்பவான்களினால் வெளிப்படுத்தப்படுகின்றன ஆதரமற்ற பதிவுகள் மக்களை அச்சத்துக்குள்ளாக்குவதோடு போலித் தகவல்கள் மக்கள் மத்தியில் பரவலடையவும் காரணமாக அமைந்து விடுகின்றன.


இந்நிலையில், உண்மையான தகவல்கள் பொறுப்புடன் தெரிவிக்கப்படுகின்றபோது மக்கள் முன்னெச்சரிக்கiயுடன் செயற்படுவதற்கு வழியேற்படுத்தும.; மாறாக, வதந்திகள், பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றபோது அது மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளவே செய்யும். அதனால், ஒரு போலிச் செய்தி அல்லது தகவல்கள் எவ்வாற காணப்படும் அதை எவ்வாறு அடையாளம் காண முடியும் என்ற விளக்கங்கள் கடந்த காலங்களில் உரிய அதிகாரத் தரப்புக்களினால் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விபரங்கள் தொடர்பான அறிவைப் பெறுவது போலிச் செய்திகளை நம்பாதிருப்பதற்கும் அவற்றை பரிமாறாமல் இருப்பதற்கும். உதவும்.   இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு சில ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர்களை பிரச்சினைக்;குள் தள்ளியதை ஞாபகமூட்ட வேண்டியுள்ளது. அதேபோல் இந்நெருக்கடியான நிலையிலும் சில ஊடகங்கள் தங்களது ஊடகங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக மதச்சாயக் கருத்துக்களை முன்வைக்கத்தக்க நிகழ்ச்சிளை நடத்துவது, செய்திகளை  வழங்குவது எந்தவகையில் ஊடகத் தர்மமாக அமையும் என்ற கேள்வியும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.


ஊடகவியலாளர்களின் பொறுப்பும், பணியும் நேர்த்தியாக முன்னெடுக்கும்போது ஊடக ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மாறாக, அந்தப் பொறுப்பை மறந்து செயற்படுவது ஊடகதர்மத்தையும் அதன் ஜனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்துவதோடு, தேசத்திற்கும் சமூகங்களுக்கும் செய்யும் துரோமாகக் கருதப்படவும் கூடும் என்பதையும் மறுதலிக்க முடியாது.  அதனால், பேனா எடுத்தவர்கள் எல்லாம், சமூகவலைத்தளங்களில் பதிவேற்றத் தெரிந்தவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் என்று கருதப்படும் இக்காலகட்டத்தில் ஊடகத்தர்மத்தையும் அதன் ஜனநாயகத்தையும் பாதுகாத்து தமது பொறுப்பையும், பணியையும் நிறைவேற்றுவது கடினம் என்றாலும் ஜனநாயகத்தின் 4வது தூணான ஊடகத்துறைக்கு கலங்கம் ஏற்பட்டு விடாது செயற்படுவது ஊடகத்துறையை நேசிக்கின்ற அதன் பணியை கௌரவமாகக் கருதுகின்றவர்களின் தார்மீகப் பொறுப்hகும். ஊடக நிறுவனங்களினதும் ஊடகவியலாளர்களினதும் தார்மீகப் கடப்பாடும் பொதுமக்களின் பொறுப்பும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி பரவலானது தடுக்கப்படுவதற்கு பேருதவியாக அமையவேண்டும்.

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.... பொதுமக்களின் பொறுப்பு!  மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா....  பொதுமக்களின் பொறுப்பு! Reviewed by Madawala News on October 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.