நாட்டில் கொரோனா தொற்றாளர் எங்கெல்லாம் சென்றிருப்பார் என்று கண்டறிய மிகவும் இலகுவான வழி...



நாட்டில் கொரோனா தொற்றாளர் எங்கெல்லாம் சென்றிருப்பார் என்று கண்டறிய மிகவும் இலகுவான வழி...

◾COVID-19 Tracing App ஒன்றை நிறுவி, சகலரும் இலங்கையரும் அந்த  App யை Download செய்ய வேண்டும். 

◾அரசாங்கத்தால் QR Code சகல வணிக வளாகங்கள், வங்கிகள், கடைகள், பொது இடங்கள், அனைத்து இடங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இலவசமாகவே வழங்கலாம்.

உ+ம் : கேத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பத்திரிகையில் Vision2020 என QR Code பத்திரிகையில் பிரசுரித்தது போல பிரசுரிக்க முடியும்.அதனை சகல இடங்களிலும் காட்சிப்படுத்தலாம். 

◾மக்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் QR Code யை Scan செய்து விட்டு உள்நுழையும் படி கூற முடியும்.
(இப்பொழுது முழு தகவல்களையும் எழுதி கொடுப்பதை விட இது இலகுவானது)

கொரோனா தொற்றாளரும், நீங்களும் ஒரு இடத்தில் இருந்தால் உங்களுடைய தொலைபேசிக்கு Alert வடிவில் செய்தியை பெறுவதற்கு அதில் முடியுமாக இருக்கும். இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகும் இந்த நேரத்தில் இந்த இடத்தில் நீங்கள் இருந்தையும் அதே நேரத்தில் கொரோனா தொற்றாளர் வந்ததையும் இலகுவாக கண்டறிய முடியும்.

உதாரணமாக 20ம் திகதி பகல் 12 மணிக்கு குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு நீங்கள் செல்ல, அதே இடத்திற்கு, கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரும் வர, இரண்டு நாட்களின் பின் கொரோனா தொற்று ஏற்பட்டவர் வைத்தியசாலையிற்கு சென்று, தொற்றை உறுதிப்படுத்தினால், 20ம் திகதி பகல் 12 மணிக்கு அந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்த அத்தனை பேருக்கும் Message Alert ஒன்றும், அவர்களை Trace பன்னுவதற்கும் இலகுவாக இருக்கும்.!

இதனை  அரசாங்கத்தால் செய்தால் மிக இலகுவாக கொரோனா தொற்றாளர்களை இனங்கண்டு, தொற்றை கட்டுப்படுத்த முடியும்.!

நியூஸிலாந்து இவ்வாறான ஒரு தொழிநுட்ப முறையையும்  ஏற்படுத்தி கொண்டுதான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி இருக்கிறது என்பது மேலதிக தகவல்.!

BY:  Azeem Jahufer
நாட்டில் கொரோனா தொற்றாளர் எங்கெல்லாம் சென்றிருப்பார் என்று கண்டறிய மிகவும் இலகுவான வழி... நாட்டில் கொரோனா தொற்றாளர் எங்கெல்லாம் சென்றிருப்பார் என்று கண்டறிய மிகவும் இலகுவான வழி... Reviewed by Madawala News on October 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.