வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்... சம்மாந்துறையில் சுமந்திரன் வேண்டுகோள்.



பாறுக் ஷிஹான்
எமது அரசியல் செயற்பாட்டிற்கு அரசு முட்டுக்கட்டை
போட்டுக்கொண்டிருப்பதனால் வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜயாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இன்று(27) செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

அரசாங்கமானது எமது அரசியல் எதிர்ப்பினை அடக்குவதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.இவ்வாறான தடைகள் முட்டுக்கட்டைகள் நீக்குவதற்காகவே வட கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பதற்கு கோரப்பட்டுள்ளது.முழுமையாக ஹர்த்தாலை அனுஸ்டிப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

இதே வேளை கடந்த காலங்களில் 19 ஆவது சீர்த்திருத்த சட்டத்தில் குறைகள் இருந்ததை நாம் அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கும் தயாராக இருந்தோம்.ஆனால் இச்சட்டத்தை முழுமையாக இல்லாமல் பண்ணுவது என்பது பழைய நிலைக்கு செல்வது போன்றதாகும்.அதாவது 18 ஆவது சீர்திருத்தத்திற்கு மீண்டும் செல்வது என்பது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.அதனால் தான் புதிய 20 ஆவது சீர்திருத்த சட்டத்தை எதிர்க்கவுள்ளோம் என கூறினார்.

மேலும் தனது கருத்தில்

நான் பிரதிநிதித்துவ படுத்துகின்ற இலங்கை தமிழரசுக்கட்சி அதன் யாப்பில் முஸ்லீம் மக்களின் தனியான சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வேற எந்த அரசியல் கட்சிகளின் யாப்புகளிலும் இவ்விடயம் இருக்கின்றதா என எனக்கு தெரியாது.முஸ்லீம் கட்சிகளுடைய அரசியல் யாப்பிலே இவ்விடயம் உள்ளதா? என எனக்கு தெரியாது.

ஆனால் தமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.இதனால் தான் தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த அஸ்ரப் வட்டுக்கோட்டை மாநாட்டிற்கும் சென்றிருக்கின்றார்.அங்கு தனித்தழிழீழம் பிரகடணம் செய்கின்ற போது அங்கு பிரசன்னமாக இருந்தவர்.இதனால் தான் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுத்தராவிடின் தம்பி அஸ்ரப் தமிழீழத்தை பெற்று தருவேன் என மேடைகளில் முழங்கியவர் என நினைக்கின்றேன்.பின்னர் 1977 ஆண்டு காலப்பகுதியில் தேர்தல் ஒன்றின் பின்னர் ஏற்பட்ட முடிவுகள் அஸ்ரப்பின் மனதினை மாற்றியது. அதன் தொடர்ந்து தான் முஸ்லீம் மக்களிற்கு தனிநாடு தேவையற்றது என எண்ணிய பின்னர் அவரது அரசியல் செயற்பாடு மாற்றமடைந்தது.

ஒரு கவிஞனாக சட்டவாளனாக அரசியல் வாதியாக தினந்தோறும் அவர் பரிணமித்தவர்.ஆரம்ப காலத்தில் இருந்த கொள்கையில் இருந்து நீங்கிய பலரிடம் பயமிருக்கும்.அனால் பெரும் தலைவர் அஸ்ரப்பிடம் அந்த பயம் இருக்கவில்லை என்பதை அவர் எழுதிய சில கவிதைகள் தெரிவித்திருக்கின்றது.தமிழ் பேசும் மக்களாக தனிநாடு கேட்டார்.அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதற்காக
அவரது அரசியல் பாதை திரும்பியது.முஸ்லீம் மக்களுக்கு இந்நாட்டில் தனித்துவமாக வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.தேசிய மட்டத்தில் அந்த சிந்தனை இருந்தது என குறிப்பிட்டிருக்கின்றார் என கூறினார்.
வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்... சம்மாந்துறையில் சுமந்திரன் வேண்டுகோள். வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்... சம்மாந்துறையில் சுமந்திரன் வேண்டுகோள். Reviewed by Madawala News on September 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.