போலித் தேன் விற்பனை முறியடிப்பு.



மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் தேன் என ஏமாற்றி
விற்கப்பட்ட போலி தேன் போத்தல்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை அழிக்கப்பட்டது.


5 குழுக்களாக பிரிந்து விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் வவுனியா மெனிக்பாம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


மடு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதர்களுடன் இணைந்து இவை அழிக்கப்பட்டுள்ளது.


கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து காய்ச்சி குறித்த போலி தேன் தயாரிக்கப்பட்டு போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ய இருந்தமை தெரிய வந்துள்ளது.


தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பின்னர் இவர்களது வயதினை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் வழக்கு தொடராமல் அனைத்து போலித் தேனும் அழிக்கப்பட்டது.
போலித் தேன் விற்பனை முறியடிப்பு. போலித் தேன் விற்பனை முறியடிப்பு. Reviewed by Madawala News on September 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.