ஏழை மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி


(அப்துல்சலாம் யாசீம்) 
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் கண் பார்வைக் குறைபாடுள்ள
ஏழை மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட அரச அதிபர்  முன்னிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ம் திகதி திங்கட்கிழமை மாலை 2.00 மணிக்கு திருகோணமலை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது.



திருகோணமலை ஹார்ட் சிலோன் பவுண்டேஷன் நிறுவனத்தினரின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவின் நிமித்தமாக 28.09.2020 அன்றைய தினம் இவ் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.



ஹார்ட் சிலோன் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் டொக்டர் ரவிச்சந்திரன்  இதற்கான முயற்சியினை கடந்த ஜூலை மதம் முதல் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.



கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களினால் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாவட்டத்திலுள்ள சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். கண் மருத்துவ நிபுணர்களால் / ஒளியியல் வல்லுநர்களால் வழங்கப்பட்ட மருத்துவ நியமச் சீட்டுடன், இம் மாணவருக்கு மூக்குக் கண்ணாடி வாங்குகின்ற அளவுக்கு வசதி இல்லை எனவும் அம் மாணவர் கல்வி கற்கும் பாடசாலை அதிபராது சிபாரிசுக் கடிதத்துடன் விண்ணப்பித்தால் அவர்கள் சகலருக்கும் இலவசமாகக் கண்ணாடிகள் வழங்கப்படும் எனத் தாம் உறுதியளித்ததாகக் கூறினார்.



அவர் உறுதியளித்ததன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ம் திகதி மாலை 2.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் திருமலை மாவட்டச் செயலாளர் அரச அதிபர்  அசங்க  அபேயவர்தன அவர்களது கரத்தினால் இவ் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.




ஏழை மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி ஏழை மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி Reviewed by Madawala News on September 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.