நாளை இடம்பெறும் மடவளை ஜே எம் சித்தீக் எழுதிய தப்புக்கணக்கு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கிறோம்.



மடவளை வை எம் எம் ஏ யின் முன்னாள்  தலைவர் அல் ஹாஜ்
ஜே. எம். சித்தீக் எழுதிய தப்புக்கணக்கு நூல் வெளியீட்டு விழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஜே.எம்.சித்தீக் எழுதிய 'தப்புக் கணக்கு' என்ற சிறுகதை நூல் நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மடவளை மதீனா தேசிய பாடசாலை அஷ்ரப் கேட்போர் கூடத்தில், எம்.எம்.பீர் முஹம்மத் (செயலாளர், மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை) தலைமையில் இடம் பெற உள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான கெளரவ ரவுப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொள்ள உள்ளதோடு- நூலுக்கான கருத்துரையை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் (தென்கிழக்குப் பல்கலைக் கழகம்) அவர்களும் மகிழுரையை சமய,சமூகப் பேச்சாளர் முத்தையாபிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்களும் முன்வைப்பார்கள்.

மடவளை பஸார் வை.எம்.எ.ஏ கிளையின் ஏற்பாட்டில் நிகழும் இவ்விழாவில் பதிப்புரையை சஹீத் எம்.ரிஸ்மி (தலைவர்,அகில இலங்கை வை.எம்.எம்.ஏ) அவர்களும் வரவேற்புரையை எம்.எம்.ரியாஜ் (தலைவர்,வை.எம்.எம்.ஏ. மடளைக் கிளை), ஆசியுரையை பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் பவ்ஸ் ஏ.காதர் (பணிப்பாளர், வர்த்தக மற்றும் தொழில் துறை வாரியம், மத்திய மாகாணம்) வாழ்த்துரையை கலாநிதி பவ்சுல் ரஸீன் (சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வியற் கல்லூரி, பொல்கொல்லை) அவர்களும் வழங்குவார்கள்.

மேற்படி விழாவில் எஸ்.எம்.நிலாம் ( முன்னாள் தினகரன் ஆசிரிய பீடம்) அவர்கள் பிரதம அதிதியால் விருது வழங்கி கெளரவிக்கப் பட இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

By : (அன்சார் எம்.ஷியாம்)
நாளை இடம்பெறும் மடவளை ஜே எம் சித்தீக் எழுதிய தப்புக்கணக்கு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கிறோம். நாளை இடம்பெறும் மடவளை ஜே எம் சித்தீக் எழுதிய தப்புக்கணக்கு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கிறோம். Reviewed by Madawala News on September 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.