20வது அரசியல் யாப்புத் திருத்தங்களுக்கு எதிராக நானே நீதிமன்றம் சென்று வாதாடவும் உள்ளேன் .



தீயதையே திருத்துவோம் என்றவர்கள் நல்லதையும் சேர்த்தே
 மாற்றுகிறார்கள்-
நீதீமன்றம் செல்கிறார் ரவூப் ஹக்கீம்.
(அன்சார் எம்.ஷியாம்)
கடந்த தேர்தல்களின் போது தீயதையே திருத்துவோம் என்றவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவில்  மக்களாணையையும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டுக்கு அண்மித்த  பெரும்பான்மையையும் பெற்ற பிற்பாடு யாப்பில் இருக்கும்  நல்லவற்றையும் மாற்றுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் ஒரு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று சனிக்கிழமை, மடவளை மதீனா தேசிய பாடசாலையில் ஜே.எம்.சித்தீக் எழுதிய தப்புக் கணக்கு சிறுகதை நூல் வெளியீட்டு விழாவின் போது தெரிவித்தார்.

இங்கே தொடர்ந்தும் உரையாற்றுகையில், 78 ஆம் ஆண்டு அரசியல் யாப்பை ஒத்த முழு அதிகாரமும் ஜனாதிபதியின் கையில் தாரை வார்த்து விடும் ஓர் அரசியல் திருத்தமே முன்மொழியப் படுகிறது. இதற்கெதிராக நாங்கள் விடயங்களை முன்னெடுத்த போதும் அவர்கள் கை ஓங்கி விடுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இவர்களின் நடவடிக்கைகளால் கட்சிக்குள்ளும் பாராளுமன்றத்திலும் ஓர் அவதி நிலையே தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது.

நாமும் இந்தத் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தே வருகிறது. யார் எவர் எங்கிருந்து என்று சொல்ல மாட்டேன். இன்றும் இரண்டு அழைப்புகள் வந்தன.

எது எவ்வாறிருப்பினும் நூற்றுக்கு தொன்னூறு வீதம் வாக்களித்த எனது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறு செய்ய மாட்டேன்.

முன் மொழியப் பட்டிருக்கும் இந்த 20வது அரசியல் யாப்புத் திருத்தங்களுக்கு எதிராக நானே நீதிமன்றம் சென்று வாதாடவும் உள்ளேன் என்றும் தெரிவித்தார்
20வது அரசியல் யாப்புத் திருத்தங்களுக்கு எதிராக நானே நீதிமன்றம் சென்று வாதாடவும் உள்ளேன் . 20வது அரசியல் யாப்புத் திருத்தங்களுக்கு எதிராக நானே நீதிமன்றம் சென்று வாதாடவும் உள்ளேன் . Reviewed by Madawala News on September 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.