மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு காரணம் இதுவா.... - Madawala News Number 1 Tamil website from Srilanka

மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு காரணம் இதுவா....மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு  காரணம் இதுவா....


தனக்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிமல் சிறிபால டி சில்வா தொழிலாளர் அமைச்சராகவும், மஹிந்த அமரவீர சுற்றுச்சூழல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண, சுதர்சினி பெர்ணான்டோ பிள்ளை ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு காரணம் இதுவா.... மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு  காரணம் இதுவா.... Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5