ISIS இலங்கை வலையமைப்பு தொடர்பில் 2 நல்லாட்சி அமைச்சர்களிடம் தகவல் வழங்கினேன் ; மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் கபூர் சாட்சியம் வழங்கினார்..




ISIS இலங்கை வலையமைப்பு தொடர்பில் 2 நல்லாட்சி அமைச்சர்களிடம் தகவல் வழங்கினேன்
; மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் கபூர் சாட்சியம் வழங்கினார்..

ISIS இலங்கை வலையமைப்பு தொடர்பில் 2 நல்லாட்சி அமைச்சர்களிடம் தான் 2017 ஆண்டு  தகவல் வழங்கியதாக  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிரு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தனது உயர்தர வகுப்பு ஆசிரியை ஒருவர் தன்னை தொடர்புகொண்டு  தனது மகன் ஆஸிக் (23 வயது) ஐ எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக தனக்கு தெரிவித்ததாக சாட்சியம் வழங்கிய அவர் இது தொடர்பில் முழு விபரங்களை தனது ஆசிரியை தனக்கு அளித்ததாக கூறினார்.

குறித்த விபரங்களை அப்போதய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கியதாக கூறிய அவர் அவரது பணிப்புரைக்கு அமைய அப்போதய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவை அலரி மாளிகையில் சந்தித்து ஆசிக் தொடர்பில்  தகவல் வழங்கியதாக சாட்சியம் வழங்கினார்.

குறித்த விடயம் தொடர்பில் தான் சகல ரத்னாயக்கவிடம் கூறிய பின்னர்  தன்னிடம் பாதுகாப்பு பிரிவினர் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் எந்த தகவலையும் அவர்கள் தன்னிடம் இருந்து பெறவில்லை என தகவல் வெளியிட்ட அவர் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிரு தாக்குதலை தடுத்திருக்கிலாம் என குறிப்பிட்டுள்ளார்.
ISIS இலங்கை வலையமைப்பு தொடர்பில் 2 நல்லாட்சி அமைச்சர்களிடம் தகவல் வழங்கினேன் ; மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் கபூர் சாட்சியம் வழங்கினார்.. ISIS இலங்கை வலையமைப்பு தொடர்பில் 2 நல்லாட்சி அமைச்சர்களிடம் தகவல் வழங்கினேன் ; மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் கபூர் சாட்சியம் வழங்கினார்.. Reviewed by Madawala News on July 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.