அரபுக் கல்லூரிகளை மீளத் திறத்தல்!



நாட்டில் கோவிட் 19 காரணமாக பாடசாலைகள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கு விடுமுறை
வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அரபுக் கல்லுரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. 

கல்வி அமைச்சு பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மீளத் திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுடன் அதற்கான திகதியையும் நிர்ணயம் செய்துள்ளது.

எமது திணைக்களம், கல்வி அமைச்சினால் பாடசாலைகள், பிரிவெனா கல்லுரிகள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கு தயாரிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு
அரபுக்கல்லரிகளுக்கு ஏற்ற விதத்தில் பொருத்தமான வழிகாட்டி கையேடொன்றை தயாரித்துள்ளது. இது
தொடர்பில் கடந்த 2020.06.24 ம் திகதி திணைக்களம் அரபுக்கல்லூரிகளின் அதிபர்மார்களுடன்
கலந்தாலோசித்து பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

1. கல்லூரிகளை மீள திறப்பதற்கு முன்னர் பிரதேச பொதுசுகாதார அதிகாரி ( PHI) யின் அனுமதியைப்
பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி கையேட்டுக்கு ( இக்கையேட்டினை எமது திணைக்கள
இணையத்தளத்தில் பதவிறக்கம் செய்ய முடியும்) அமைய சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலைப்
பெற்று நெகிழ்ச்சித் தன்மையுடன் பின்பற்றக் கூடியதாக கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை
கருத்திற்கொள்ளவும்.

3. அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எதிர் வரும் 2020.07.06 ம் திகதி தத்தமது
கல்லூரிக்கு சமுகமளித்து முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

4. எதிர் வரும் 2020.07.08 ம் திகதி அல்லது அதன் பின்னர் அரபுக்கல்லூரிகளை திறந்து ஒரு வகுப்பு
மாணவர்களை மாத்திரம் அனுமதிக்க முடியும். (உ+ம்: இறுதி ஆண்டு மாணவர்கள்) மேலும்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும்
மாணவர்கள் இருப்பின் அவர்களையும் உள்வாங்கி இரண்டு அல்லது மூன்று வகுப்புகளை
ஆரம்பிப்பதாயின் பிரதேச பொது சுகாதார அதிகாரி ( PHI) மற்றும் எமது திணைக்களத்தின்
முன்அனுமதி பெறப்படல் வேண்டும். 

( பின்வரும் இலக்கத்திற்கு வட்சாப் மூலம் அறியத்தரவும். 0779918843)

5.ஏனைய வகுப்பு மாணவர்கள் ஹஜ் பெருநாள் விடுமுறையின் பின்னரே உள்வாங்கப்படல் வேண்டும்.
அது தொடர்பான வழிகாட்டல்கள் பின்னர் வழங்கப்படும்.

எனவே, மேற்குறித்த வரயறைகளை கவனத்திற்கொண்டு கல்லூரிகளை மீளத்திறக்க முடியும் என்பதை அறியத்தருகிறேன்.

A.B.M. அஷ்ரப்
பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

-Almashoora madawala News
அரபுக் கல்லூரிகளை மீளத் திறத்தல்! அரபுக் கல்லூரிகளை மீளத் திறத்தல்! Reviewed by Madawala News on July 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.