கிழக்கு மாகாணத்தை ஹக்கீமிடமிருந்தும், கல்முனையை ஹரீஸிடமிருந்தும் பாதுகாப்போம்.


கல்முனையை பாதுகாக்க டெலிபோன் சின்னத்திற்கு வாக்களிக்க கூறுகிறார்கள்.
ஞானசார, கருணா போன்றோரை வாக்கு வேட்டைக்காக பயன்படுத்துகிறார்கள்.

கல்முனையில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளில் ஒரு வீதமேனும் தீர்க்க வக்கற்ற இவர்கள் கல்முனையை பாதுகாப்பதாக கூறுவது கேலிக் கூத்தாகும் என தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நமது அரசியல் விடுதலை இயக்கமான தேசிய காங்கிரஸை பலப்படுத்துவதால் மாத்திரமே அம்பாரை மாவட்டம் மற்றும் முஸ்லிம் தேசியத்தின் விடுதலையும் சுபீட்சமும் தங்கியுள்ளது. மாறாக கடந்த 20 வருடங்களாக
அரசியல் பிழைப்பு நடத்தி வரும் முஸ்லிம் காங்கிரஸினால் எந்த ஒரு விடயங்களையும் சாதிக்க முடியாது. தற்போது மக்களை சூடாக்கி வாக்குகளை கொள்ளையடிக்கும்
சூழ்ச்சி அரசியல் கோசங்களை தாரக மந்திரமாக பாவித்து வருகின்றனர்.

உண்மையில் கல்முனையை பாதுகாக்க வேண்டுமாயின் தேசிய காங்கிரஸின் கரத்தை பலப்படுத்துவதோடு அங்கே நிறுத்தப்பட்டுள்ள கல்முனைத் தொகுதிக்குரிய மூன்று
வேட்பாளர்களையும் அந்தப் பிரதேச மக்கள் தெரிவு செய்து தனித்தன்மையுடன் தேசிய நீரோட்டத்தில் பயனிக்கும் தேசிய காங்கிரஸின் தலைமையை பலப்படுத்துவதன் ஊடாகவே
கல்முனையில் அரசியல் பிழைப்புக்காக விரிசல்படுத்தப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் உறவு, ஏனைய பிரதேசங்களுக்கு இடையிலான உறவு, அபிவிருத்திசார் அரசியல் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்க்க முடியும்.

வேண்டுமென்றே 2015இல் பொது தேர்தலில் ஹென்றி மகேந்திரன் என்கின்ற ஒருவரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் இன்று ஞானசார - கருணா போன்றோரின் புகைப்படங்களை தமது முகநூலிலும் சுவரொட்டிகளிலும் பாவித்து வாக்குப் பிச்சை
கேட்கும் அளவுக்கு அவர்களது நிலைமை சென்றிருக்கிறது.

சிந்திக்கின்ற வாக்காளர்களே, முக்கியமான விடயங்கள் பேசப்படுகின்ற
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கூட கலந்து கொள்வதில் இருந்து தவிர்ந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மீண்டும் தெரிவு செய்து மந்தகதியில் பிற்போக்காக நமது அனைத்து செயற்பாடுகளையும் கொண்டு செல்வதற்கு மறைகரங்கள் ஆன டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக  முஸ்லிம் காங்கிரஸ் இயங்குகின்றது என்ற  அச்சம் இன்று  புத்திஜீவிகள் மத்தியில் தோன்றியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவரது ஆசனத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகசிங்கள தமிழ் மக்களிடம் சாணக்கியன் என்ற போர்வையில் வாக்குகளை கண்டி மாவட்டத்தில் கோருகின்றார். அங்கு இதுவரை ஒரு சுவரொட்டியில் கூட ஒரு பிரச்சார மேடையில் கூட மறைந்த மாபெரும் தலைவரை அவர் கண்ணியப்படுத்தியதாக ஒரு இடமேனும்
காணவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு வரும்போது முஸ்லிம் காங்கிரஸ் தொப்பியும் சால்வையும் அணிந்து கொண்டு மறைந்த தலைவரின் புகைப்படத்தை இங்கு பாவித்து மக்களின் உச்சபட்ச அதிகாரமான வாக்குரிமையை கபடத்தனமாக அபகரித்து இனங்களுக்கிடையில் சூடேற்றி, பிரதேசங்களில் சூடேற்றி, குறிப்பிட்ட
பிரதேசங்களில் இருக்கின்ற அரசியல் ஆளுமைகள் பிரித்தாண்டு தனது இருப்பையும் தலைமையையும் பாதுகாக்கின்ற கைங்கரியத்தை இன்று நேற்றல்ல அவர் தலைமைத்துவத்தை
பொறுப்பேற்றதலிருந்து தொடர்ந் தேர்ச்சியாக செய்து வருகின்றார். இதனை மக்கள் புரிந்தும் தொடர்ந்து கிழக்கு மண் ஏமாற்றப்படுவது மிக வருத்தம் அளிக்கின்ற ஒரு விடயமாகும்.

இந்த மாவட்டத்தை வெல்வதாயின் தேசிய காங்கிரஸிற்கு வாக்களிப்பதோடு இந்த மாவட்டத்தை பாதுகாப்பதோடு கல்முனையை ஹரீஸிடமிருந்தும் முழு கிழக்கையும் ஹக்கீமிடமிருந்தும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம் என குறித்த பிரச்சார கூட்டத்தின்போது உருக்கமான முறையில் மக்களிடம் அறைகூவல் விடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மக்களை ஏமாற்றி வாக்கு தேடும் ஏமாற்றுக் கோஷமே 'மாவட்டத்தை வெல்வோம், முஸ்லிம் மாவட்டத்தை மீட்போம்' என்பதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் - தேசிய காங்கிரஸ் வேட்பாளர் 
கிழக்கு மாகாணத்தை ஹக்கீமிடமிருந்தும், கல்முனையை ஹரீஸிடமிருந்தும் பாதுகாப்போம். கிழக்கு மாகாணத்தை ஹக்கீமிடமிருந்தும், கல்முனையை ஹரீஸிடமிருந்தும் பாதுகாப்போம். Reviewed by Madawala News on July 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.