தங்க விலை ஏன் 1 இலட்ச ரூபாயை தாண்டியது..?



இலங்கையில் இன்று 24 காரட் தங்கத்தின் ஒரு பவுன்
விலை 
ரூ. 1 இலட்சத்தை தாண்டி உள்ளது.

இலங்கையில் 22 காரட் தங்கத்தின் விலை 93, ஆயிரம் ரூபா என்று தேசிய இரத்தின மற்றும் நகை ஆணையத்தின் மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் உதவி இயக்குநர் இந்திக பண்டார தெரிவித்தார்.

22 காரட் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 6000 ரூபாய் அதிகரித்து உள்ளது என்றார்.

கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பத்தில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 82,000 மற்றும் 24 காரட் விலை 84, 000 ரூபா

இலங்கையில் தங்க இருப்புக்கள் குறைந்ததாலும்,
தங்க சந்தையில் பங்குகள் இல்லாததாலும் தங்கத்தின் விலை உயர்வு காணப்படுகிறது.

வங்கிகளால் ஏலம் விடப்பட்ட தங்கத்தின் அளவு குறைந்ததும்   விலை உயர்விற்கு பங்களித்தது.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் விமானப் பயணம் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டதால் தங்கத்தின் பங்குகளை மொத்தமாக வாங்குவது வெகுவாகக் குறைந்தது ”

விமானப் பயணத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போதும், தங்கத்தை வாங்குவதை மீண்டும் தொடங்குவதன் மூலமும் நாட்டில் தங்க இருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்ப உத்தேசித்துள்ளதாக இந்திக பண்டாரா மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2020 க்குள் தங்கத்தின் விலை சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க விலை ஏன் 1 இலட்ச ரூபாயை தாண்டியது..? தங்க விலை ஏன் 1 இலட்ச ரூபாயை  தாண்டியது..? Reviewed by Madawala News on July 09, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.