ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட்டமாக பொதுஜன பெரமுனவில் இணைவு !!



ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்த
அனைவருக்கும் நானே பாதுகாப்பு வழங்குவேன் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இன்று (30) 1000 ஆதரவாளர்கள் மற்றும் 8 பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, இன்றை தினம் நாவலபிட்டி கங்கேஹில கோரளை பிரதேச சபையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் எட்டு உறுப்பினர்களும் ஆதரவாளர்கள் 1000 பேரும் எம்மோடு இணைந்து கொண்டனர். 

இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள் இவர்களுடைய தாய் தந்தையர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்களும் வந்து இணைந்துள்ளார்கள். 

ஏன் இவர்கள் வந்தார்கள் என்றால் ஐக்கிய தேசிய கட்சி இவர்களுக்கு இதுவரை காலமும் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொண்டதில்லை. 

கங்கேஹில பிரதேச சபையில் எட்டு பிரதேசசபை உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தார்கள் அந்த எட்டு பேரும் எம்மோடு இணைந்து கொண்டார்கள். 

கங்கேஹில பிரதேச சபையில் எதிர்கட்சி ஒன்று இல்லை நாவலபிட்டியில் மாத்திரமல்ல ஒவ்வொரு தோட்ட பகுதியில் இருந்தும் மக்கள் எம்மோடு இணைந்து கொள்வதற்கு வருகிறார்கள். 

ஐக்கிய தேசிய கட்சி முறையாக செயற்படவில்லை என கூறிதான் ஐக்கிய மக்கள் சக்தி என்ற ஒரு கட்சியினை உருவாக்கினார்கள். 

அவர்களும் இந்த மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தார்கள். மக்களுக்கு என்ன செய்தார்கள். படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதில்லை. வீதி அபிவிருத்தி, குடி நீர் வசதி போன்றவற்றை கூட ஏற்படுத்தி கொடுத்தது இல்லை, ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஊடாக ரணிலும் லக்ஷமன் கிரியல்ல ஆகியோர்தான் இலாபத்தை அனுபவித்தனர். ஆகையால் தான் மக்கள் இன்று எமது பக்கம் வந்துள்ளார்கள். என்றார்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட்டமாக பொதுஜன பெரமுனவில் இணைவு !! ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட்டமாக பொதுஜன பெரமுனவில் இணைவு !! Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.