உலமாக்களே, உங்களில் இருவர் உங்களுக்காக மயிலில், அவமானப்படுத்திவிடாதீர்கள்...


இம் முறை அம்பாறை மாவட்ட அ.இ.ம.காவின் வேட்பாளர் பட்டியல் மிக அழகானது.
பல் துறை சார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இக் கட்சியில் மார்க்கத்தை கற்ற இரண்டு உலமாக்கள் போட்டியிடுகின்றமை அதன் விசேடங்களில் ஒன்று. ஒருவர் அக்கறைப்பற்று ஹனீபா மதனி, இரண்டாமவர் இறக்காமம் பிரதேச சபை பிரதி தவிசாளர் நௌபர் மௌலவி.

அம்பாறையில் போட்டியிடுகின்ற பலமான கட்சிகளில் அ.இ.ம.காவில் மாத்திரமே மார்க்கத்தை கற்ற உலமாக்கள் போட்டியிடுகின்றனர். இது அ.இ.ம.காவானது உலமாக்களுக்கு வழங்குகின்ற ஒரு மிகப் பெரிய கௌரவமும், அங்கீகாரமுமாகும்.அ.இ.ம.காவின் தலைவர் மார்க்கத்தை சரியான முறையில் பின் பற்றுபவர்களை, மார்க்கத்தை கற்ற உலமாக்களை கௌரவிக்கும் பண்புடையவர். அவரது இப் பண்பே வேட்பாளர் பட்டியலில் வெளிப்பட்டுள்ளது.

இவ்விரு உலமாக்களும் சிறந்த நற் பண்புமிக்கவர்கள். இவர்களுக்கு எவ்வித சிறு மன சஞ்சலமுமின்றி எமது வாக்குகளை அளிக்க முடியும். போதை பொருள் வியாபாரிகளுக்கும், மது, மாது பழக்கங்களை பகிரங்கமாக வைத்திருப்பவர்களுக்கும், என்னதான் ஊருக்கு எம்.பி வேண்டுமென வாக்களித்தாலும், வாக்களித்த பிறகு எமது மனமே எம்மை கேள்வி கேட்டு கொல்லுமல்லவா? அந் நிலை இவர்களுக்கு வாக்களிக்கும் போது இருக்காது. தோற்றாலும் சிறந்தவர்களுக்கு வாக்களித்துள்ளோம் என்ற நிம்மதி எமக்கிருக்கும். இறைவனுடைய கலாமை கற்றவனுக்கு வாக்களிப்பதில் பெருமை தானே! இறைவனின் கலாத்தை கற்றுணர்ந்தவனை விட ஒரு அறிஞன் தான் உலகில் இருந்துவிட முடியுமா..?

இலங்கையிலுள்ள உலமாக்கள் தொழில் வாய்ப்பு உட்பட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த பிரச்சினைகளை பாராளுமன்றம் கொண்டு செல்ல உலமாக்களுக்குள்ள மிகச் சிறந்த வழி அம்பாறையில் களமிறங்கியுள்ள உலமாக்களை ஆதரிப்பதே! இவர்களில் ஒருவர் தெரிவு செய்யப்படுவாராக இருந்தால் ஒட்டு மொத்த இலங்கையிலுள்ள உலமாக்களின் பாராளுமன்ற பிரதிநிதியாக அவர் இருப்பார் என்பதில் ஐயமில்லை. ஒரு உலமா பாராளுமன்றம் நுறைகின்ற போது ஏது பேசிவிடப் போகிறார். இறைவனை மறந்து செயற்படுவாரா? ஏனையோரும் உலமாக்கள் பற்றி சிந்திக்க, பேச முடியும். அது ஒரு உலமாவே பேசுவது போன்று இருக்குமா?

இவ்விரு வேட்பாளர்களும் குறைந்தது 5000 வாக்குகளை ( இவர்களால் வெற்றி வேட்பாளருக்கு சவால் விடுக்குமளவு 5000 ஐ விட கூடுதலான வாக்கை பெற முடியும் ) பெற சக்திபெற்றவர்கள். அ.இ.ம.காவில் வெற்றி பெற எதிர்பார்க்கப்படுபவர் ஒருவரின் வாக்கு எண்ணிக்கை 12000 இற்கும் 15 000 இற்கும் இடைப்பட்டதாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒட்டு மொத்த உலமாக்களும் சேர்ந்து ஒரு பத்தாயிரமளவான வாக்கெண்ணிக்கையை இவர்களுக்கு திரட்டி கொடுக்க முடியாதா..? சிந்தியுங்கள்.. இது ஒன்றும் சாத்தியமற்ற வழியுமல்ல.

இவர்கள் இருவரும் மிகக் குறைந்தளவு வாக்குகளை பெற்றால், அது ஒட்டுமொத்த உலமாக்களுக்குமான அகௌரவமாக அமையும். ஒருபோதும் அல்லாஹ்வின் கலாமை கற்ற உலமாக்கள் இழிவுபடுத்தப்பட்டுவிடக் கூடாது. இவர்களுக்கு உலமாக்கள் மாத்திரமல்ல, ஏனையோரும் வாக்களிப்பது கடமை. அவர்களது மூளையில் அல்லாஹ்வுடைய கலாமிருப்பதால், எமது உள்ளத்தில் அவர்கள் இருந்தாக வேண்டும்.
இதுவரை காலமும் இவ்வாறான உலமாக்களுக்கான அங்கீகாரங்கள், வாய்ப்புக்கள் கிடைத்திருக்கவில்லை. இம் முறை அ.இ.ம.காவினூடாக கிடைத்துள்ளது. சிறந்த முறையில் பயன்படுத்த உலமாக்கள் முன் வர வேண்டும். உங்களில் ஒருவன் உங்களுக்காக வந்துள்ளான்.

By:  துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை

உலமாக்களே, உங்களில் இருவர் உங்களுக்காக மயிலில், அவமானப்படுத்திவிடாதீர்கள்... உலமாக்களே, உங்களில் இருவர் உங்களுக்காக மயிலில், அவமானப்படுத்திவிடாதீர்கள்... Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.