விகாரையினுள் துப்பாக்கிகளை வைத்திருந்த பிக்குவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!



துப்பாக்கிகளை வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த
மாளிகாவத்த ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் விஹாராதிபதி ஊவதென்னே சுமன தேரருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தியினால் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து இன்று (01) தீர்ப்பளிப்பட்டது.

ரீ 56 ரக துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டு தவிர்ந்த 50 கைக்குண்டுகள் மற்றும் 210 ரவைகள் வைத்திருந்த ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து, சுமன தேரருக்கு நிரபராதியாகக் கருதி விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த தினமொன்றில் மாளிகாவத்த ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, துப்பாக்கி உட்பட வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

ஊவதென்ன சுமன தேரருடன் குறித்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த அவரது சீடரான மாவெலதென்னே சுமேத தேரரை, அவருக்கு எதிராக அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்தும் நிரபராதியாகக் கருதி விடுதலை செய்ய நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

2010 ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த தினமான 2010 ஜனவரி 20 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் மாளிவத்தை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் ரீ-56 ரக துப்பாக்கிகள் 2, கைக்குண்டுகள் 50 மற்றும் 210 ரவைகளை வைத்திருந்ததாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வழக்கு விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தனது தீர்ப்பை அறிவித்த நீதிபதி, மாவெலதென்னே சுமேத தேரருக்கு எதிரான ரீ 56 ரக துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய இரு குற்றச்சாட்டுகள், மனுதாரர் தரப்பினரால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அக்குற்றச்சாட்டுகளில் இருந்த தேரரை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பறிவித்தார்.

இந்நிலையில், நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்காக ஆயுட்கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Metro
விகாரையினுள் துப்பாக்கிகளை வைத்திருந்த பிக்குவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை! விகாரையினுள் துப்பாக்கிகளை வைத்திருந்த பிக்குவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை! Reviewed by Madawala News on June 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.