கல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம்.


எம்.வை.அமீர்-
கல்முனை பிராந்திய கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளராக செயற்பட்டுவரும்
சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் ஆதம்பாவா முகம்மட் சஹீர்  அவர்கள் , கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அங்கீகாரத்துடன், கிழக்கு மாகாண பொறியியல் சேவை மற்றும் உட்கட்டமைப்பு பிரதி பிரதம செயலாளரினால் உடனடியாக செயற்படும் வண்ணம் கல்முனை மாநகர சபையின் பகுதி நேர பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிரந்தர பொறியியலாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை இவர் இந்தக் கடமையில் இருப்பார்.

உள்ளூராட்சி திணைக்களங்களுடனான வேலை அனுபவம் மற்றும் நெல்சிப் புரா நெகும திட்டத்தின் வேலை அனுபவத்தின் அடிப்படையில் இந்த நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
கல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம். கல்முனை மாநகரசபையின் பொறியியலாளராக சஹீர் நியமனம். Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5