இலங்கை முழுதும் வீடுகளில் அமைதியாக கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள்.



புனித நோன்புப் பெருநாளை வீடுகளிலேயே அமைதியாகக் கொண்டாடிய 

இலங்கை  முஸ்லிம்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)
புனித நோன்புப் பெருநாளை (24-05-2020)முஸ்லிம்கள் தங்கள் தங்கள் வீடுகளிலேயே அமைதியாகக் கொண்டாடினார்கள்.


ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முஸ்லிம்கள் இவ்வருட புனித நோன்புப் பெருநாளை மிகவும் அமைதியாகவும்,மிகவும் எழிமையாகவும் வீடுகளிலேயே கொண்டாடினார்கள்.


பெருநாள் தொழுகை தொழுகையை குடும்பம் குடும்பமாக வீடுகளிலேயே தொழுது கொண்டார்கள்.ஒவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகையை திறந்த வெளிகளிலும்,பள்ளிவாசல்களிலும் தொழுவந்த முஸ்லிம்களுக்கு இவ்வருட பெருநாள் தொழுகையை வீடுகளில் தொழுதமை புதிய அனுபவமாகவும், குடும்பத்துடன் தொழுது கொண்ட மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


பெருநாள் தொழுகையின் பின்னர் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி ஆறத்தழுவி மகிழ்ச்சிசைப் பகிர்ந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


ஆனால் இம்முறை கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்திய சமூக இடைவெளியைப் பேணும் வகையில் அவற்றைத் தவிர்த்து அரசின் அறிவுறுத்தலைப் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

...........
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட முஸ்லீம் மக்கள் இம்முறை றமழான் நோன்பு பெருநாளை எளிமையான முறையில் கொண்டாடிவருகின்றனர்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (24) இம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பெருநாளிற்கான தக்பீர் சொல்லப்பட்ட நிலையில் தத்தமது வீடுகளில் இருந்து அனைத்து முஸ்லீம் மக்களும் மிக எளிமையான முறையில் றம்ழான் பண்டிகை தொழுகையினை முன்னெடுத்திருந்தனர்.

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக அரசாங்கம் விடுத்திருந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளின் இருந்து தொழுகையினை நிறைவேற்றியதுடன் நிபந்தனைக்கு அமைய விசேடமாக ஒலிபெருக்கி மூலமாக குரான் ஒதும் முறையும் இங்கு ஒழுங்கமைப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலதிகமாக அயல் வீட்டுகளில் பெருநாள் தொகுகையின் பின்னர் தத்தமது உபசரிப்பு முறையினை ஈடுப்பட்டு வருவதை காண முடிந்தது.

குறிப்பாக கல்முனை பொலிஸ் பிராந்தியத்தில் நோன்புப்பெருநாள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கல்முனை ,சாய்ந்தமருது, மருதமுனை, மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இன்றைய ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாக மிகவும் அமைதியான முறையில் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் நோன்புப்பெருநாள் வழமை போன்று இம்முறை பள்ளிவாயல்களிலோ திறந்த வெளிகளிலோ அல்லது மைதானங்களிலோ தொழுகைகள் நடத்தப்படவில்லை என்பதுடன் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே தொழுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதே வேளை பள்ளிவாயல்களில் தக்பீர் சொல்லப்பட்டதுடன் ஊரடங்குச்சட்டத்தை மதித்து நடக்குமாறும் யாரும் வீண் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அடிக்கடி அறிவிப்புச்செய்யப்பட்டுக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது.

................

ஏ.பி.எம்.அஸ்ஹர்
கல்முனைப்பிரதேசத்தில் இன்றைய நோன்புப்பெருநாள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


கல்முனை சாய்ந்தமருது மருதமுனை மற்றும் நட்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இன்றைய ஊரடங்குச்சட்டத்தை மதித்தும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் மிகவும் அமைதியான முறையில் பெரு நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.


நோன்புப்பெருநாள் வழமை 
மை போன்று இம்முறை பள்ளிவாயல்களிலோ திறந்த வெளிகளிலோ அல்லது மைதானங்களிலோ.

தொழுகைகள் நடத்தப்பட்டவில்லை பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே தொழுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதே வேளை பள்ளிவாயல்களில் தக்பீர் சொல்லப்பட்டதுடன் ஊரடங்குச்சட்டத்தை மதித்து நடக்குமாறும் யாரும் வீண்விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அடிக்கடி அறிவிப்புச்செய்யப்பட்டுக்கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது.

.............
ஹஸ்பர் ஏ ஹலீம்_
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 அசாதாரண சூழ் நிலையின் காரணமாக புனித நோன்புப் பெருநாளான இன்று (24)காலை இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தங்களது நோன்பு பெருநாளுக்கான தொழுகைகளை நிறைவேற்றினார்கள்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மதித்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளிகளை பேணியும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டதை காண முடிந்தது.புனித றமழான் மாத நோன்பினை நோற்று இன்றைய தினம் நோன்பு பெருநாளை வீடுகளில் கொண்டாடி வருகின்றனர். 

கிண்ணியா,முள்ளிப்பொத்தானை,மூதூர்,கந்தளாய்,குச்சவெளி உள்ளிட்ட திரூகோணமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் அமைதியாகவும் வீட்டில் இருந்தவாறும் நோன்பு பெருநாளை கொண்டாடினர்.





இலங்கை முழுதும் வீடுகளில் அமைதியாக கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள். இலங்கை முழுதும் வீடுகளில் அமைதியாக கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள். Reviewed by Madawala News on May 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.