“அனாதையான, கைவிடப்பட்ட மற்றும் பராமரிப்புக் குறைந்த சிறுவர்களின் கண்ணீரை துடைக்க கை கோர்ப்போம்”


THE GUARDIAN சிறுவர் மேம்பாட்டு நிலையம், (THE GUARDAN FOUNDATION பதிவு எண்- KDS/KUN/05/15/03/2017/06),
மத்திய மாகாண சமூக மேம்பாடு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 4 வயது முதல் 18 வயது வரையான அனாதையான, பராமரிப்புக் குறைந்த, கைவிடப்பட்ட மற்றும் நீதிமன்றத்தினூடாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அலுவலகம் மூலமாகவும் தரப்படும் சிறார்களுக்காக  மேற்படி முகவரியில் இயங்குவதோடு, மத்திய மாகாணத்தினுள்  39 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில்  ஒன்றாக,  THE GUARDIAN சிறுவர் மேம்பாட்டு  நிலையமானது, ஐந்து  வருடகாலமாக இயங்கி வருகின்றது. 

  الحمدلله
மேலும் மேற்குறிப்பிடப்பட்ட 17 சிறுவர்களும், 6 முழுநேர ஊழியர்களும், 3 பகுதி நேர ஊழியர்களும்,  5 பகுதி நேர ஆசிரியர்களும் சேவையில் உள்ளார்கள். எனவே தற்போது எமது நிலையத்தில் உள்ள 17 பிள்ளைகளின் ஒரு மாதத்திற்கான மொத்த செலவு ரூபாய் 3,68,500 எனக் கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் தற்சமயம் மாதாந்தம் நன்கொடையாக ரூபாய் 1,12,000 எமக்குக் கிடைக்கபெறுவதால், மேலும் மாதாந்தம் ரூபாய் 2,56,500 இற்கான தேவை உள்ளதாலும் எமது எதிர்கால நடவடிக்கைகளுக்கு போதிய அளவு நிதி இல்லாத காரணத்தினாலும் தாங்களின் தனவந்தர்கள் புத்திஜீவிகள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகிய நீங்கள், இந்த ரமலானிலும் இதர காலங்களிலும் நேரடியாகவோ அல்லது எமது வாங்கிக் கணக்கின் ஊடாகவோ உதவி செய்வதை எமது நிலையம் எதிர் பார்க்கின்றது. 


இது எமது நிலையத்தில் உள்ள மேற்குறிப்பிடப்பட்ட பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சித்திட்டங்களுக்கு பேர் உதவியாக அமையும்  என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் மாதாமாதம் எமக்கு வரக்கூடிய வரவு covit 19 இனால் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.


 “அனாதையை பொறுப்பேற்பவனும் நானும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தனது நடு விரலையும், சுட்டு விரலையும் இணைத்துக் காட்டிக் கூறினார்கள்” (புஹாரி, முஸ்லிம், அபூதாவூத்). 

குறிப்பு - மேலும் எமது நிலையத்தில் இருக்கும் பிள்ளைகளுடன்  எதிர்காலத்தில் மேலதிகமாக 28  பிள்ளைகளுக்கான இட வசதிகள் உள்ளது. பிள்ளைகள் அதிகரிக்கும் போது செலவுகளும் அதிகரிக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்


எமது நிலையத்தின் கணக்கு இலக்கம் –
THE GUARDIAN CHILD DEVELOPMENT CENTRE
BOC மடவல கிளை
A/C 0081571720 ( C/A)
SWIFT CODE- BCEYLKLX


எமது தொலைப்பேசி இலக்கம்
(பொது முகாமையாளர்) 0094764621285(WHATSAPP), (உதவி பொது முகாமையாளர்) 0094764621280 , (நிலையம்) 081 3123410
E-MAIL- guardiankandy@gmail.com

எமது முகவரி 
த கார்டியன் சிறுவர் மேம்பாட்டு நிலையம் 
12, பஹல கம, தம்பகஹமுல, 
கோனவல, ரஜவெல்ல, 
திகன, கண்டி, 
ஸ்ரீ லங்கா

“அனாதையான, கைவிடப்பட்ட மற்றும் பராமரிப்புக் குறைந்த சிறுவர்களின் கண்ணீரை துடைக்க கை கோர்ப்போம்” “அனாதையான, கைவிடப்பட்ட மற்றும்  பராமரிப்புக் குறைந்த  சிறுவர்களின் கண்ணீரை துடைக்க கை கோர்ப்போம்” Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.