'ஜனநாயகத்தின் நான்காவது தூணைப் பாதுகாப்போம்': வி.ஜனகன்..!



2004ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியளார்

 நடேசன் உட்பட அனைத்து தமிழ் பேசும் ஊடகவியாளர்கள் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. வடமாகாணத்திலிருந்து நாடாளுமன்றம் வந்த 60இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இப்பட்டியலைக் கையளித்திருந்தார்கள். 


ஆனால் அதற்கும் எந்த விதமான உரிய செயற்பாடுகளும் கடந்த அரசாங்கத்திலும் இடம்பெறவில்லை" என்ற தனது ஆதங்கத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

 

ஊடக சுதந்திர தினமான இன்று, அதுதொடர்பில் வௌியிட்ட ஊடக அறிக்கையிலேயே கலாநிதி ஜனகன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறுகையில்,

 

“இன்று, உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் வேளையில் இலங்கையில் இரண்டு தசாப்தகாலமாக ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் பாதுகாக்கப்படுவதில்லை என்பது மிக வருத்தப்படும் நிலையாகும்.

 

“Reporters without borders என்ற அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் இலங்கை இன்றுவரை நூறு இடங்களை தாண்டியே இருந்துவருகிறது. இன்று, 180 நாடுகளில் 127ஆவது இடத்தில் இலங்கை இடம்பெற்றுள்ளது. அரசியலும் ஊடகமும் பின்னிப்பிணைந்து இருந்தாலும் அரசியல் இயந்திரத்தில் ஊடவியளாளர்களும் ஊடகமும் என்றும் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிடுகிறார்கள். அதிலும் இலங்கையில் தமிழ் ஊடகவியளாளர்களின் நிலை தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்றே காணப்படுகின்றது.

 

“இன்றுவரை 37 ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டும் கொலைசெய்யப்படும் உள்ளார்கள். இவர்களில் 34 பேர் தமிழ் பேசும் ஊடகவியளார்கள் என்பது மிக சிந்திக்க வேண்டிய விடயம். 2004ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியளார் நடேசன் உட்பட அனைத்து தமிழ் பேசும் ஊடகவியாளர்கள் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. கடந்த அரசாங்கத்தில் இருந்த ஜனாதிபதியிடமும் பிரதமரிடத்திலும் ஊடவியளாளர் ஒன்றியங்கள் இவர்கள் தொடர்பான விசாரணைகளை தூரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வழங்கி இருந்தது. குறிப்பாக, வடமாகாணத்திலிருந்து நாடாளுமன்றம் வந்த 60இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இப்பட்டியலைக் கையளித்திருந்தார்கள். ஆனால் அதற்கும் எந்த விதமான உரிய செயற்பாடுகளும் கடந்த அரசாங்கத்திலும் இடம்பெறவில்லை. இன்று இவ்வாறு கொலைசெயப்பட்ட ஊடகவியலாளர்களின் பல குடும்பங்கள் எந்தவித பொருளாதார நிவாரணங்களற்று நிர்க்கதியாக உள்ளார்கள்.

 

“யுத்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் அரசியல் பாதை மற்றும் அது தொடர்பான அறிவை வழிநடாத்தக்கூடியது இந்த ஊடகங்கள் தான். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ் ஊடகங்கள் மீதும் ஊடகவியாளர்கள் மீதுமான அரச அழுத்தங்கள் தமிழ் சமூகத்தின் அரசியல் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. அது போல் பிராந்திய ஊடகவியலாளர்களுடைய பொருளாதார கட்டமைப்புச் சீர்குலைந்துள்ளது. அவர்கள் வழக்கும் சேவைக்கு உரிய ஊதியம் வரையறுக்கப்பட வேண்டும். பிராந்திய ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதனூடக இந்த ஊடகத் துறையைப் பயன்படுத்தி சமூக கட்டமைப்புகளைப் பலப்படுத்த முடியும் என்பதை அரசாங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

“மேலும் இன்று வியாபித்துள்ள சமூக ஊடகத்துறையை நான்காவது தலைமுறை ஊடகமாக அங்கிகரிக்க வேண்டும். அதனூடகவே இந்த சமூக ஊடகம் தொடர்பாக முறையான விழுமியங்களையும் சட்டங்களையும் உருவாக்கி அவற்றை நெறிப்படுத்த முடியும். ஜனாநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையைப் பாதுகாத்து மக்கள் மத்தியில் அதற்கான தேவையையும் மதிப்பையும் ஏற்படுத்த வேண்டியது ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்” என்று, கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.


'ஜனநாயகத்தின் நான்காவது தூணைப் பாதுகாப்போம்': வி.ஜனகன்..! 'ஜனநாயகத்தின் நான்காவது தூணைப் பாதுகாப்போம்': வி.ஜனகன்..! Reviewed by Madawala News on May 04, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.