ரமழான் வினா விடை போட்டி -2020 ; நேற்றைய வெற்றியாளர் மற்றும் இன்றைய தினத்திற்கான கேள்வி ..



கேள்வி இலக்கம் 03 ; தஜ்ஜால் யாருக்கு ஒப்பானவன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?


ஆதாரத்துடன் பதில்களை அனுப்பவும்.


கேள்விக்கான சரியான பதிலை உங்கள் பெயர் முகவரியுடன் கேள்வி இலக்கத்தினை மாத்திரம் குறிப்பிட்டு  94 777 420 702 என்ற இலக்கத்திற்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கவும்


நேற்று கேட்கப்பட்ட *இஸ்லாத்தில் இணைந்த பின் பிலால் (ரலி) அவர்கள் செய்த சிறந்த செயல் எது?


ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபி (ஸல்) அவர்கள்பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன் என்றார்கள். அதற்கு பிலால் (ரலி)  *இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல் என்று பதிலளித்தார்கள்.*


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 1149


என்ற சரியான பதிலை கூறிய ஆயிரத்திற்கும் அதிகமான  வாசகர்களில்  கொழும்பு தெமடகொடயை சேர்ந்த சகோதரர் மொஹமட் ரிப்கான் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.




அவருக்கான பரிசுத்தொகை அவரது வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்டது.


ரமழான் வினா விடை போட்டி -2020

==========================

Marina Grill நிறுவனம் மடவளை நியூஸ் ஊடக அனுசரனையில் நாடளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கவிடயங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது


இந்த ரமழான் மாதத்தில் 20 நாட்களுக்கு தினமும் ஒரு வினா வீதம்  கேட்கப்படும். சரியான பதில் அளிப்பவர்களில் இருந்து வெற்றியாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.


தினமும் தெரிவு செய்யப்படும் ஒரு  வெற்றியாளருக்கு 5000 ரூபா பணப்பரிசில் வழங்கப்படும்.


தினமும் தெரிவு செய்யப்படும் ஒரு வெற்றியாளருக்கு 5000 வீதம் தெரிவுசெய்யப்படும்  20 வெற்றியாளர்களுக்கு ரமழானின் 20 நாட்களுக்கு 5000 வீதம் பணப்பரிசில் வழங்கப்படும்.


வயது வேறுபாடு இன்றி யாவரும் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம்


போட்டி பற்றிய விபரம்

இந்த ரமழான் மாதத்தில் 20 நாட்களும் 20 கேள்விகள் பிரசுரிக்கப்படும்.


அனைத்து கேள்விகளும் இஸ்லாமிய மார்க்க விடயங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கும்.


தினமும் ஷஹர் வேளையில்  கேட்கப்படும்  கேள்விக்குறிய சரியான விடையை அதே தினத்தில் மாலை மஹ்ரிப் வேளைக்கு முன்னர் பெயர் முகவரியுடன்  கேள்வி இலக்கத்தை  மாத்திரம் குறிப்பிட்டு +94777420702 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.


போட்டியின் நிபந்தனைகள்

மார்க்க விடயங்களில் தெளிவை ஏற்படுத்துவதே இப்போட்டியின் முதன்மை  நோக்கமாகும்


ஆகவே, பொது மக்களின் நலன்கருதி மௌலவிமார்கள், மௌலவியாக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.


வயது வேறுபாடு இன்றி யாரும் கலந்துகொள்ளலாம்.


ஒருவர் பல இலக்கங்களில் பதில் அனுப்புதல்  போன்ற மோசடிகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவோம். மோசடி இஸ்லாத்தில் ஹராமாகும்..


ஒருவர் ஒரு கேள்விக்கு ஒரு தடவை மாத்திரமே பதில் அனுப்பமுடியும்.குறித்த ஒரு நாளில் ஒரு தடவைக்கு மேல் பதில் அனுப்பும் வாசகர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.


நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.


[அல்குர்ஆன் 2:148]


ஏற்பாட்டுக்குழு



ரமழான் வினா விடை போட்டி -2020 ; நேற்றைய வெற்றியாளர் மற்றும் இன்றைய தினத்திற்கான கேள்வி .. ரமழான் வினா விடை போட்டி -2020 ; நேற்றைய வெற்றியாளர் மற்றும் இன்றைய தினத்திற்கான கேள்வி .. Reviewed by Madawala News on May 04, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.