நாட்டின் பொருளாதார நிலைமையை மாளிகாவத்தை சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.



நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்று மாளிகாவத்தையில் மூவர்
உயிரிழந்த சம்பவம் இலங்கையின் பொருளாதார நிலை மையை தெளிவாகக் காண்பிக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகை தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 87 வீதமாகும். இவ் வாண்டின் இறுதிக்குள் அந்த கடன் தொகை 93 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு 2021 ஆம் ஆண்டாகும் போது இந்த கடன் தொகை நூற்றுக்கு நூறு வீதமாகக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அண்மையில் பதிவாகிய 3 உயிரிழப்புக்கள் நாட்டில் மக்களின் பொருளாதார நிலைமையை எடுத்துக் காட்டுகின்றன.

மாதமொன்றுக்கான உணவிற்காக பணம் பகிர்ந்த ளிக்கப்பட்டுள்ளது. 1500 ரூபாவிற்காக உயிரை இழக்கும் வகையில் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மக்களுக்கு வாழ்வது கடினமாக வுள்ளது. அவர்களிடம் பணம் இல்லை. தொழில் இல்லை . வருமானம் இல்லை . மாத இறுதியில் அத்தியாவசிய பொருட் களும் முடிந்து விடுகின் றன. 5000 ரூபாய் நிவா ரணத்தைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. அரச ஊழியர்களுக்கு பண் டிகைக் கொடுப்பனவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தின் மூலமும் இலங்கையில் தற்போது காணப்படும் பொருளா தார நிலைமை என்ன என்பது தெளிவாகிறது.

இந்த வருடத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாத நாடுகள் பற்றி ஊடகங்களில் செய் திகள் வெளியாகியுள் ளன. ஆர்ஜென்டீனா, ஈக்குவாடோர் மற்றும் லெபனான் ஆகிய நாடு களை இவ்வாறு கடனை திருப்பிச் செலுத்த முடி யாத நாடுகளாக அடையா பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமையை மாளிகாவத்தை சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் பொருளாதார நிலைமையை மாளிகாவத்தை சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. Reviewed by Madawala News on May 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.