ஜூன் மாதம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது.



கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்

 நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு, அரசாங்கத்தால் நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்பட்ட 5,000 ரூபாயை ஜூன் மாதம் வழங்காமல் இருப்பதற்கு, அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சரவையின் பேச்சாளர்
பந்துல குணவர்தன தெரிவித்தார்.


ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாதத்தில், 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது அரசியல் முயற்சியாக அமையலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.



இது தொடர்பில் ஆராய்ந்துப் பாரக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தரவுக்கு, 17 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.


இந்நிலையில் நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாகவும் இந்தக் கொடுப்பனவை வழங்குவது அரசியல் முயற்சியாக அமையலாம் என்பதைக் கருத்திற்கொண்டு, ஜூன் மாதத்தில் கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். 
ஜூன் மாதம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது. ஜூன் மாதம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது. Reviewed by Madawala News on May 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.