PHOTOS: காத்தான்குடியில் இடம்பெற்ற (Social Distance) பொதுச் சந்தை.

(S.சஜீத்)
ஊரடங்கு உத்தரவு இன்று காலை ஆறு முதல் தளர்த்தப்பட்டிருந்த
 வேளையில் காத்தான்குடி பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி சமூகக் குழுமம் ஆகியன இணைந்து இன்று (01)  ஏற்பாடு செய்த சமூக இடைவெளி பேணல் (Social Distance) விசேட பொதுச் சந்தை ஒன்றினை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த வேளையில் வழமை போன்று பொதுச் சந்தைகளில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் நோக்கில் பொதுச் சந்தை கட்டடப் பகுதிக்குள் மரக்கறி வகைகள் மற்றும் ஏனையவைகள் விற்பனை செய்யவிடாது கொரோனா (கொவிட் 19) நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு காலை 06 மணிமுதல் மதியம் 02 மணிவரை காத்தான்குடி வாவிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் விசேட பொதுச் சந்தையொன்று சமூக இடைவெளி பேணல் நடைமுறையின் கீழ் அமைக்கப்பெற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதோடு விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போது அமுலில் காணப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் (06) திங்கட்கிழமை காலை ஆறு மணிவரை நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
PHOTOS: காத்தான்குடியில் இடம்பெற்ற (Social Distance) பொதுச் சந்தை. PHOTOS: காத்தான்குடியில் இடம்பெற்ற (Social  Distance) பொதுச் சந்தை. Reviewed by Madawala News on April 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.