மனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய பேரருள் இதற்காக கிட்டும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது.



கோவிட் 19 வைரஸ் உலகத்தையே பெரும் சவாலுக்கு உட்படுத்தி 
இருக்கும் ஒரு கால கட்டத்தில் முஸ்லிம் சமுதாயம் ரமழான் நோன்பை எதிர் கொண்டு இருக்கின்றது.

இந்த நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்கள் பொறுமையுடனும் பொறுப்புடனும் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை  இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்திருக்கும் ரமழான் நோன்புக்கான ஆசி செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று புனித நோன்பு ஆரம்ப மாகும் நாளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்கள் ளுக்கு விடுத்திருக்கும் அந்த ஆசி செய்தியில் மேலும் தெரிவித்தி இருப்பதாவது இஸ்லாமிய மக்கள் மிகவும் உயர்வாக மதிக்கின்ற ரமலான் மாத நோன்பு இன்று ஆரம்பமாகின்றது.

இன்றைய காலம் கடந்த காலங் களைவிட ஒரு உலக நெருக்கடிக் கால் தள்ளப்பட்டிருக்கின்ற ஒரு வேளையில் இந்த ரமலான் மாதம் வந்துள்ளது. கொரோனா வைரஸ் என்பது பணத்தினாலோ அதிகாரத் தினாலோ கட்டுப்படுத்தக்கூடிய தொன்றல்ல.

இந்த கொரோனா தொற்று கார ணமாக முஸ்லிம் மக்கள் அனைவ ரும் ஆத்மீக, கலாசார சமூக ரீதியில் பெரும் சவாலை எதிர்கொண்டுருப்பதை நான் நன்கறிவேன்.

இந்த நிலையில் கடந்த காலங் களை விட மிகவும் வித்தியாசமா
னதாக இந்த வருடத்தை நோக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் சகோதர்களான நீங்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். உங்களுக்கு அல்லாஹ்வுடைய பேரருள் இதற்காக கிட்டும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது.

உங்களது நம்பிக்கை ஒருபோ தும் வீண்போகாது. நாட்டுக்கா கவும் நாட்டு மக்களுக்காகவும், அரசாங்கத்துக்கும் உங்களுடைய பிரார்த்தனைகள் இந்த நோன்பு காலத்தில் அதிகம் அதிகம் கிட்டும் என நான் நம்பிக்கை கொண்டு ளேன்.

மற்றவர்களுடைய நலனுக்காக கருணையுடன் செயல்படுவர்களா கவே முஸ்லிம் சமூகத்தை பார்க் கின்றேன்..

நீங்கள் இந்த ரமழான் மாதத்தை அதற்காக முழுமையாக பயன்ப டுத்திக் கொள்வீர்கள் என்ற தான் எண்ணுகிறேன்.

ரமழான் காலத்தில் பகல் வேளையில் உண்ணாமல் இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் உங்களுக்கு இந்த தடவை உரிய விதத்தில் வழிபாடுகளை மேற் கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் போனதைவிட்டு மனம் வருந்து கின்றேன். என்றாலும் கூட நீங்கள் பொறுமையுடனும் பொறுப்புட னும் உங்கள் மதக் கடமைகளை வீடுகளிலிருந்து ஒழுங்காக மேற் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

இதற்காக இந்த காலகட்டத்தில் சுகாதாரத் துறையினரின் ஆலோ சனைகளையும் அறிவுறுத்தல்க ளையும் ஏற்றுக் கொண்டு உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவ தன் மூலம் நாம் இந்த தெருக்கடி யிலிருந்து விரைவாக வெற்றி பெற முடியும் என நம்புகிறேன். இங்கு உங்களுக்குரிய ஒரு பொறுப்பை குறித்து கட்டிக்கிட்ட விரும்பு இன்றேன். உங்களதும் உங்கள் குடும்பத்தினரதும் பாதுகாப்பை யும் ஏனைய மக்களினதும் நாட்டி னதும் பாதுகாப்பையும் உங்கள் தலைமேல் சுமந்து இந்த சவாலுக்கு நீங்கள் முகம் கொடுக்க வேண்டி யுள்ள து.

உங்களுடைய பிரார்த்தனைகள் அனைத்தும் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உரியதாக அமைய வேண்டும் என்ற எதிர் பார்ப்புடன் உங்களுக்கு எனது நல் ராசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின் றேன்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ரமழான் மாதத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே உங்கள் கடமைகளை ஒழுங்கான முறையில் இஸ்லாமிய வழிகாட்ட லின் கீழ் மேற் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய பேரருள் இதற்காக கிட்டும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய பேரருள் இதற்காக கிட்டும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. Reviewed by Madawala News on April 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.