திங்கள் காலை 5 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.



தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்
அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று 25.04.2020 நள்ளிரவு 1.30 மணிக்கு பொலிஸ் ஊடக பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் படி ,

கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும்  கண்டி மாவட்டத்தில் அலவாத்துகொடைபொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வராக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள   ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர அனைத்து மாவட்டங்களுக்கும் 24.04.2020 வெள்ளி இரவு  8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு  சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த செய்தியை உறுதிப்படுத்திய அதேவேளை,திங்கள் காலை  5 மணிக்கு சகல மாவட்டங்களிலும் தளர்த்தப்படும் பொலிஸ்  ஊரடங்கு  மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பிலான எந்த அறிவித்தலும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் அதுதொடர்பில் ஏதும் அறிவுறுத்தல் இருந்தால் அறிவிக்கப்படும் என  மடவளை நியுசுக்கு குறிப்பிட்டனர்.






திங்கள் காலை 5 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. திங்கள் காலை 5 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. Reviewed by Madawala News on April 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.