கொரோனா ஊரடங்கும் சாதாரண மக்கள் பசியும்.


தற்போதைய இலங்கையின் நிலைப்பாட்டை  கருத்திற்கொண்டு வீடு வீடாக அத்தியாவசிய பொருட்கள்
வினியோகம் செய்வதற்கான அனுமதி பிரபலமான வர்த்தக நிலையங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது அதில் cargills மற்றும் kells போன்ற பெரிய நிறுவனங்கள் அடங்கியுள்ளது.

வீட்டிலேயே தஞ்சமடைந்துள்ள நாங்கள் இவ்வாறான பொருட்களை வாங்குதற்கு ஒவ்வொரு நாளும் வீட்டில் என்ன காசா அச்சடிக்கிறோம்?

சாதாரண ஒருவனிடம் 10.000/= வீட்டில் அல்லது பேங்கில் இருக்கும் அதுவும் இப்போது முடிந்திருக்கும். முடிந்துவிட்டது. பிறகு இவர்கள் கொண்டுவரும் பொருட்களை வாங்குதற்கு எங்கே காசு இருக்கிறது?

இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் சாதாரண மக்கள் தற்போது உள்ளனர் என்பது நிதர்சனம்

இதற்கு ஒரு தீர்வாக ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒருவகையில் வங்கிக்கணக்கு வைத்திருப்பார்கள் அவர்கள் வைத்திருக்கும் கணக்கின் வங்கிகள் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஒவ்வொரு கணக்கும் ஆகக் குறைந்தது 30.000/=  வரையில் ஐந்து வருடங்களுக்கு சலுகை அடிப்படையில் வட்டியற்ற கடனாக வழங்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு உடனடியாக வழங்குவதற்கு அல்லது  கணக்கிற்கு உள்ளடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று இலங்கையில் பலதரப்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன ஏதாவது ஒரு வகையில் நாம் அவற்றுக்கு வாடிக்கையாளர்களே. இவ்வளவு காலம் நம்மால் தான் அந்த நிறுவனங்கள் இயங்குகின்றன. உதாரணமாக Nestle company @ Unilever company @ Bairaha company இவ்வாறான பல கம்பெனிகளை  எடுத்துக்கொண்டால் அதனுடைய எத்தனை பொருட்களை நாம் அன்றாடம் உபயோகிக்கிறோம் அதேப்போன்று ஊடகங்களை எடுத்துக்கொண்டால் எத்தனை ஊடகங்களுக்கு நாம் நேயர்களாக இருக்கிறோம் ஏதேனும் ஒரு வகையில் நாம் இவ்வாறான நிறுவனங்களுடன் தொடர்புபட்டுள்ளோம். அதேபோன்று அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளோம் என்பது நாம் யாவரும் அறிந்ததே.

இவ்வளவு காலம் நாம் அவர்களின் வாடிக்கையாளர்கள் என்ற வகையில்  இரண்டு மாதங்களுக்கு தேவையான பொருட்கள் ஏன் அவர்கள் இலவசமாக தரக்கூடாது? அவர்களின் நலனுக்கு வாடிக்கையாளர்கள் இருப்பது போன்று மக்களின் துன்பத்தை துடைக்க ஏன் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலை'யில் மக்களுக்காக தனது நம்பிக்கை வாடிக்கையாளர்கள் என்ற அடிப்படையில்  இத்தகைய நிறுவனங்கள் ஊடகங்கள்  முன்வரக்கூடாது? சரியாக பார்த்தால் அவர்களின் ஒரு வருடத்தின் உழைப்பு தான் கொடுக்கவேண்டி வரும். மீண்டும் அவர்கள் வழங்கியதை விட பெறலாம். இலங்கை வரலாற்றில் மாபெரும் சரித்திரம் படைத்த இந்த  நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்த தருணத்தில் இதைவிட வேறு வழிகள் இல்லை இந்த நிலை நீடிக்குமாயின் சாதாரண மக்கள் பசி கொடுமை தாங்காமல் வீதிக்கு வந்து கடைகளை உடைத்து தானாகவே பொருட்களை கொள்ளையடிக்கும் காலம் மிக தொலைவில் இல்லை. அவ்வாறான ஒரு விடையம் வெளிநாடுகளில் நடந்துள்ளது நடக்கிறது. இன்நிலை ஏற்பட்டால் நாடே நாசம் என்று தான் சொல்லவேண்டும்.

"கொரோனா'வை விட கொடியது தனது மனைவி பிள்ளைகள் பெற்றோர்கள் சகோதரர்கள் அயளவர்கள் உண்ண உணவின்றி தவிப்பதை நாம் நேரில் பார்ப்பது. அவ்வாறு நேர்ந்தால் இன்னுமொரு சோமாலியாவாக இலங்கை மாறும்.

சகல நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொஞ்சம் தற்போது மக்களுக்காக ஒன்றுபடுவோம் இதில் எந்த நஷ்டமும் உங்களுக்கு ஏற்படப்போவதில்லை!

"மனிதநேயம் வாழும் அவ்வளவு தான்...!

M.k.M Sarjoon 
Galewela
கொரோனா ஊரடங்கும் சாதாரண மக்கள் பசியும். கொரோனா ஊரடங்கும் சாதாரண மக்கள் பசியும். Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.