பெண்கள் தலைமைதாங்கும் வறிய குடும்பங்களுக்கு உதவி.


-எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெண்கள் தலைமை தாங்கும்
குடும்பங்களின் சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ஈ.எஸ்.ரி.எப் (நுளுவுகு) நிறுவனத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.


ஈ.எஸ்.ரி.எப் (நுளுவுகு) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.றமீஷா, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.றுசைத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 குடும்பங்களுக்கும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 குடும்பங்களுக்குமாக ஐம்பது குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித் -
பெண்கள் தலைமைதாங்கும் வறிய குடும்பங்களுக்கு உதவி. பெண்கள் தலைமைதாங்கும் வறிய குடும்பங்களுக்கு உதவி. Reviewed by Madawala News on March 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.