கொரோனா வைரஸ் தொற்றை மறைத்தவருக்கு எதிராக வழக்கு!

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை எனப்படும் ராகம 
வைத்தியசாலையில், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை மறைத்து வேறு நோய்க்கான  சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு, கொரோனா தொற்று இருப்பது பின்னர் தெரியவந்த நிலையில், வேண்டுமென்றே கொரோனா தொற்றை மறைத்தமை தொடர்பில் அந்த தொற்றாளருக்கு எதிராக வத்தளை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ராகம போதன வைத்தியசாலையில் அண்மையில்  சாதாரண நெஞ்சு வலி என கூறி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இரு நாட்கள் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

 சாதாரண நெஞ்சு வலிக்கு சிகிச்சையளிக்கும் போது வைத்தியர்கள், தாதியர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள்  கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதால், பின்னர் அந்த நோயாளிக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில், அவ்வாறு சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதியர், வைத்தியசாலை ஊழியர்கள், அந்த சிகிச்சை அறையில் அருகே இருந்த ஏனைய நோயாளர்கள் என அனைவரும் தற்போது சுய தனிமைபப்டுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தனது நோய் நிலைமைகளை மறைத்தமை தொடர்பில் குறித்த கொரோனா தொற்றாளருக்கு எதிராக பொலிஸார் வத்தளை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்
கொரோனா வைரஸ் தொற்றை மறைத்தவருக்கு எதிராக வழக்கு!   கொரோனா வைரஸ்  தொற்றை மறைத்தவருக்கு எதிராக வழக்கு! Reviewed by Madawala News on March 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.