பொது மக்களுக்கு கிண்ணியா பொலிஸார் கடும் எச்சரிக்கை, சட்டத்தை மீறினால் கைது.


ஹஸ்பர் ஏ ஹலீம்_
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது மக்கள் வீதிகளிலோ அல்லது வெளியில்
செல்வதையோ தவிர்க்குமாறு கிண்ணியா பொலிஸ் நிலையத்தால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரோந்து சேவை அதாவது நடமாடும் பொலிஸ் வாகனம் ஊடாக இன்று (23) இவ்வாறு ஊருக்குள் வீதி வீதியாக அறிவிப்புச் செய்து வருகின்றார்கள். கொரோனா நோயை கட்டுப்படுத்தவும் அதனை முற்காப்பு தடுப்பு நடவடிக்கையாக இவ்வாறான திட்டங்களையும் சட்டங்களையும் பொலிஸார் அமுல்படுத்தியுள்ளார்கள்.

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறுவோர்கள் மீது கைது செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவே பொது மக்கள் சட்டத்தை மதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.மீண்டும் இன்று (23) 2.00 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு கிண்ணியா பொலிஸார் கடும் எச்சரிக்கை, சட்டத்தை மீறினால் கைது. பொது மக்களுக்கு கிண்ணியா பொலிஸார் கடும் எச்சரிக்கை, சட்டத்தை மீறினால் கைது. Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.