கண்டியில் அரசாங்கத்திக்கெதிராக UNPயின் முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான  புதிய அரசாங்கத்திற்கு எதிராக UNP யின் 1வது ஆர்ப்பாட்டம்
கண்டியில் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.


 எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின்னர் இந்த புதிய அரசாங்கம் மீது மக்களே கொதித்தெழுவார்கள் என்று இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய UNPயின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவு, அரசாங்க ஊழியர்களின் திடீர் இடைநிறுத்தம் உள்ளிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து இன்று கண்டி நகரில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மரக்கறி விலைகளின் அதிகரிப்பிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்களுடைய கைகளில் மரக்கறியை ஏந்தி எதிர்ப்பையும் காண்பித்தனர்.

கண்டி நகரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல:-


எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின் புதிய அரசாங்கத்திற்கு எதிராக மக்களே கொதித்தெழுவார்கள் என்றும், நவம்பரில் இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் பல நெருக்கடிகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அரச ஊழியர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். ஓய்வூதியங்கள் பறிக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் பறிக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதிகளும் இல்லை. நல்லாட்சி அரசாங்கம்  100 நாட்களிற்குள் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தோம்.

வாழ்க்கைச் செலவைக் குறைத்தோம். எரிபொருள் விலையை குறைத்தோம். ஆனால் இன்று சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருக்கின்ற போதிலும் அதன் நன்மை மக்களுக்கு வழங்கப்படவில்லை. இன்னும் இந்த அரசாங்கம் தேன்நிலவையே கொண்டாடி வருகின்றது.

மக்களை மறந்துவிட்டது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின் இந்த அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி கொள்வார்கள். கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடன் செலுத்த முடியாதென கூறியுள்ளார்.

வரலாற்றின் முதல்முறையாக எமது நாட்டு தலைவரொருவர் இவ்வாறு வெளிநாட்டுக்கு போய் கூறியுள்ளார். எமது நாட்டுத் தலைவர்களில் எவரும் இவ்வாறு இதற்கு முன் கூறியிருக்கவில்லை. எமது நாட்டின் நற்பெயர் இன்று சர்வதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்கள் இன்று காணாமல் போயுள்ளனர் என தெரிவித்தார்.





கண்டியில் அரசாங்கத்திக்கெதிராக UNPயின் முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! கண்டியில்  அரசாங்கத்திக்கெதிராக  UNPயின் முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! Reviewed by Madawala News on February 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.