பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 10 ஆச­னங்­களை கைப்­பற்­று­ம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 10 ஆச­னங்­களை கைப்­பற்­று­ம்விரைவில் நடை­பெ­று­மென எதிர்­பார்க்­கப்­படும் பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள்
காங்­கிரஸ் 10 ஆச­னங்­களை கைப்­பற்­று­மென அக்­கட்­சியின் தலை­வ­ரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

“அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் தேசியப் பட்­டியல் உள்­ள­டங்­க­லாக ஐந்து பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்தில் உள்­ளனர். இதனை இரண்டு மடங்­காக்­கு­வதே எமது கட்­சியின் அடுத்த இலக்­காகும்” என அவர் குறிப்­பிட்டார்.

இதற்குத் தேவை­யான அனைத்து வியூ­கங்­க­ளையும் தனது கட்சி தற்­போது மேற்­கொண்­டுள்­ள­தாக அவர் கூறினார். எனினும், இந்த தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­டுச்­சேர்ந்து கேட்­பதா அல்­லது தனித்துக் கேட்­பதா என்­பது தொடர்பில் இது­வரை தீர்­மா­னிக்­க­வில்லை என்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யுதீன், இது தொடர்பில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்ட பின்னர் தீர்­மா­னிக்­கப்­படும் என்றார்.

நேற்­று­முன்­தினம் கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கருத்து வெளி­யிடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பொதுத் தேர்­தலில் முஸ்லிம் கூட்­ட­மைப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ஸுடன் இணைந்து போட்­டி­யி­டு­வீர்­களா என ஊட­க­வி­ய­லாளர் இதன்­போது கேள்வி எழுப்­பி­ய­தற்கு, “இது தொடர்பில் அக்­கட்­சி­யுடன் எந்­த­விதப் பேச்­சு­வார்த்­தையும் இது­வரை மேற்­கொள்­ள­வில்லை. எனினும், எமது கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­தி­நி­தித்­து­வத்தில் பாதிப்­பேற்­ப­டாத வகையில் அக்கட்சியினர் செயற்படுவார்களாயின், இது தொடர்பில் கலந்துரையாட முடியும்” என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறினார்.-Vidivelli

றிப்தி அலி
பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 10 ஆச­னங்­களை கைப்­பற்­று­ம் பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 10 ஆச­னங்­களை கைப்­பற்­று­ம் Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5