அமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.


ஒலுவில்  எம்.ஜே.எம் பாரிஸ்
இலங்கையில் நிதி தொடர்பான பிரச்சினையில்லை எனவும் நாட்டின் நிதி வீண் விரயம் மற்றும்
கொள்ளையடிப்பது ஆகியவற்றை நிறுத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் JVP யின் பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.



தெனியாய - புஸ்சேவெல, தங்கரங்ஹா ஹெல பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றியபோது:-


நாட்டின் அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகளை கூட மாற்றுக்கின்றனர். அமைச்சர் விமல் வீரவன்ச கொள்வனவு செய்துள்ள புதிய நாற்காலியின் விலை 6 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

நாட்டில் பணப் பிரச்சினையில்லை. பணத்தை வீண் விரயம் செய்வது, கொள்ளையடிப்பதை நிறுத்தினால், நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் 278 கோடி ரூபா செலவிட்டு வாகனங்களை கொள்வனவு செய்ததாக கூறுகின்றனர். இவர்களிடம் வாகன ஆசை என்ற நோய் இருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் பயன்படுத்திய வாகனத்தை புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பயன்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு பொருந்தாது.

இதற்கு எதிராக நாங்கள் CID பிரிவில் முறைப்பாடு செய்துள்ளோம். இப்படித்தான் நாட்டில் பணத்தை வீண் விரயம் செய்கின்றனர்.

வாகனங்களை மாத்திரமல்ல அமைச்சர் மாறும் போது அமைச்சரின் நாற்காலியையும் மாற்றுகின்றனர்.

இது சரியா? மக்கள் இவற்றை நிராகரிக்க முன் வர வேண்டுமென்றும்,
ஆகவே தேவையற்ற செலவுகளே நாட்டில் பிரச்சினைகளுக்கு காரணமாகும். 6 இலட்சம் ரூபாய்க்கு விமல் வீரவன்ச நாற்காலி கொள்வனவு செய்யும் போது நாங்கள் 5 லட்சம் ரூபாய்க்கு பாலமொன்றை நிர்மாணித்துள்ளோம் என தெரிவித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு. அமைச்சர் விமல் வீரவன்ச, 6 லட்சம் ரூபாவடையன நாற்காலியை கொள்வனவு செய்ததாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.