கொரோனா வைரஸ் தாக்கம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 1665. நேற்றைய தினம் 142 பேர் உயிரிழப்பு.


சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19 உயிரிழந்தோர் எண்ணிக்கை 1665
ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை சீனாவில் 142 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் சீனாவில் கொரோனா வைரஸினால் சீன பெருநிலப் பரப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,665 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

மேற்படி மரணங்களில் 139 மரணங்கள் ஹுபேய் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன ஹுபேய் மாகாணத்தின் தலைநகர் வுஹானில் 110 பேர் இறந்துள்ளனர்.

அத்துடன் சீனாவில் கொவிட்19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2,009 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், கொரோனா வைரஸ் எனும் கொவிட் ரைவஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை சீனாவில் 68,500 ஆக அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை நேற்று மாத்திரம் 1323 பேர் குணப்படுத்தப்பட்டு வைத்தியசலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் இதனால் இதுவரை குணப்படுத்தப்பட்டு வெளியேறியோரின் எண்ணிக்கை 9419 ஆக உள்ளது எனவும் சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 1665. நேற்றைய தினம் 142 பேர் உயிரிழப்பு. கொரோனா வைரஸ் தாக்கம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 1665. நேற்றைய தினம்  142 பேர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on February 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.