நாவலப்பிட்டியில் சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் 12 பேர் கைது.


 நாவலப்பிட்டியில்  சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் 12 பேர்  கைது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றத்தில்  சந்தேக நபர்கள் 12 பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

நாவலபிட்டி பகுதியில் மாத்திரம் 500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும் இதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

அதற்கமைய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, 150 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இன்று காலை 7 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை கம்பளை பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான 8 மோப்ப நாய்களின் உதவியோடு மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது, கேரள கஞ்சா, ஹெரோயின், மாவா, கசிப்பு போன்ற போதைப்பொருட்கள் கைபற்றபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களும் நாவலபிட்டி பகுதியை சேர்நதவர்கள் எனவும் 12 சந்தேக நபர்களையும் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சதீஸ்குமார் ;  Derana
நாவலப்பிட்டியில் சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் 12 பேர் கைது. நாவலப்பிட்டியில்  சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் 12 பேர்  கைது. Reviewed by Madawala News on February 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.