அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெறும் மாணவர்களின் தொழிநுட்பக் கண்காட்சி.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தொழிநுட்பக் கண்காட்சி ஒன்றினை
வியாழக்கிழமை (20) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  அதிதிகளாக மட்டக்களப்பு  மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தொழிநுட்ப பீடத்திலுள்ள பொருட்களை மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதோடு அதன் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

குறித்த கண்காட்சியினைப் பார்வையிட பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் மாணவர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெறும் மாணவர்களின் தொழிநுட்பக் கண்காட்சி. அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெறும் மாணவர்களின் தொழிநுட்பக் கண்காட்சி. Reviewed by Madawala News on February 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.