நாம் எதிர்கட்சியில் அமர நேரிட்டாலும் ரிஷாத் பதியுத்தீனை இணைத்துக்கொள்ள மாட்டோம் ; நாமல் MP திட்டவட்டமாக அறிவிப்பு



தாம் எதிர்கட்சியில் அமர நேரிட்டாலும் ரிஷாத் பதியுத்தீனை தங்கள் அரசில் எதிர்காலத்தில்  இணைத்துக்கொள்ள மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ  திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


ஊடகம் ஒன்று அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிடுகையில் ,


மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற நாம் தேர்தலின் பின்னர் ரிஷாத் பதியுத்தீனை இணைத்துகொள்வதாக சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர் எனவும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ரிஷாத் பதியுத்தீனை இணைத்து கொண்டு ஆட்சியை முன்னெடுக்கும் எந்த தேவையும் தங்களுக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


கடந்த மகிந்த ராஜபக்‌ஷ  அரசின் செல்லப்பிள்ளையாக செயற்பட்ட அவர் நல்லாட்சி அரசில் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்தார். 


அவ்வாறான ஒருவரை இணைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க வேண்டிய எந்த தேவையும் எமக்கு இல்லை.எதிர்வரும் தேர்தலில் மக்கள் எமக்கும் பெரும்பான்மை பலத்தினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு எமக்கு பெறும்பான்மை கிடைக்காவிட்டால் நாம் ரிஷாத் பதியுத்தீனின் உதவியைபெற்று ஆட்சி அமைக்க மாட்டோம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு எதிர்கட்சியில் அமர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளார்.


கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் கணிசமான அளவு தங்களுக்கு வாக்களித்தனர் என கூறியுள்ள அவர் இந்த பொது தேர்தலில் முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவுக்கு அதிகப்படியாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

நாம் எதிர்கட்சியில் அமர நேரிட்டாலும் ரிஷாத் பதியுத்தீனை இணைத்துக்கொள்ள மாட்டோம் ; நாமல் MP திட்டவட்டமாக அறிவிப்பு நாம் எதிர்கட்சியில் அமர நேரிட்டாலும் ரிஷாத் பதியுத்தீனை இணைத்துக்கொள்ள மாட்டோம் ; நாமல் MP திட்டவட்டமாக அறிவிப்பு Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.