மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலைமை நிலவிய போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது



மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலைமை நிலவிய போதிலும்

 இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும், உள்நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


அம்பலந்தொட்ட இ.போ.ச. டிப்போவுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த பதற்ற நிலைமை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவிய வதந்தி காரணமாக நாட்டில் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். 


இருப்பினும், போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. இதனால், மக்கள் பதற்றமடைய வேண்டிய ஒரு நிலைமை ஏற்படாது எனவும் எரிபொருள் விலை அதிகரிப்புக்களும் இடம்பெறாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.   

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலைமை நிலவிய போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலைமை நிலவிய போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது Reviewed by Madawala News on January 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.