சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த இருவர், எம்.ரம்சீன் பக்கீர் தலைமையிலான பொலிஸாரினால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர்.


பாறுக் ஷிஹான்
சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த இருவர்  சவளக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாளம்பைகேணி 2 பிரதேசத்தில் வியாழக்கிழமை (9) நண்பகல் பிரதேச சபை மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியின்றி வீடொன்றில் வைத்துமாடு ஒன்று வெட்டப்படுவதாக சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகலை அடுத்து நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையிலான பொலிசார் குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன் போது குறித்த வீட்டில் இருந்த  இரு சந்தேக நபர்களும் 35 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சியும் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளது.

 குறித்த சந்தேகநபர்கள் இருவரையும்  இறைச்சியையும் கல்முனை நீதிமன்ற  நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 அண்மைக்காலமாக போயா தின விடுமுறை காலங்களில் சட்டவிரோதமாகஇறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாடு இன்று  பூரண தினமாகையால் இரகசியமாக இறைச்சி விற்பனை செய்வதற்காகவே அறுக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது
சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த இருவர், எம்.ரம்சீன் பக்கீர் தலைமையிலான பொலிஸாரினால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர். சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த இருவர்,  எம்.ரம்சீன் பக்கீர் தலைமையிலான பொலிஸாரினால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர். Reviewed by Madawala News on January 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.