வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீண்டும் இயங்க வைக்க அமைச்சர் விமல் வீரவன்ச முயற்சி.


-எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை கடதாசி ஆலை எமது நாட்டின் பெரியதொரு சொத்து இதனை இல்லாமல் செய்வதற்கு
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை முறியடித்து இதனை இயங்க செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீண்டும் இயங்க செய்வது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான உயர்மட்ட குழு ஒன்று இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம் செய்து ஆலையின் நிலவரத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

எமது நாட்டுக்கு கடதாச ஆலை மிகவும் வருமாணத்தை பெற்றுத்தந்த ஒரு நிறுவனமாகும் இதனை இழுத்து மூடுவதற்கு ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ விருப்பம் கிடையாது இதந்த ஆலையினை புணர்நிர்மானம் செய்து மீண்டும் இயங்க செய்வதற்கான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆலை அரசாங்கத்தினாலோ அல்லது தனியார் நிறுவனங்களின் உதவியைப் பெற்றோ மீண்டும் இயங்க செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அவ்வாறு மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலையில்லா பிரச்சினைக்கு ஒரு தீர்வாகவும் இந்த கடதாசி ஆலை அமையும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கடதாசி ஆலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.



வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீண்டும் இயங்க வைக்க அமைச்சர் விமல் வீரவன்ச முயற்சி. வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீண்டும் இயங்க வைக்க அமைச்சர் விமல் வீரவன்ச முயற்சி. Reviewed by Madawala News on January 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.