“சஹ்ரானின் தாக்குதலுக்கு அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை லத்தீப் கலைத்துள்ளார்"


ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையில் புலனாய்வு பிரிவினை
கலைத்துவிடுவதற்கு  பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியான  பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் நடவடிக்கை எடுத்திருந்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அங்கு  மாகல்கந்தே சுதந்த தேரர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

“சஹ்ரானின் தாக்குதலுக்கு அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை லத்தீப் கலைத்துள்ளார்.

ஏப்ரல் தாக்குதலுக்கு 08 மாதங்களுக்கு முன்னதாக களவாஞ்சிக்குடியில் உள்ள புலனாய்வு பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை, களவாஞ்சிக்குடி விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமில் புலனாய்வு பிரிவு இல்லை.

அங்கிருந்த புலனாய்வு அதிகாரிகள் கொழும்பு, மருதானைக்கு அழைக்கப்பட்டுவிட்டனர்” என்றும் மாகல்கந்தே சுதந்த தேரர் கூறியுள்ளார்.
“சஹ்ரானின் தாக்குதலுக்கு அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை லத்தீப் கலைத்துள்ளார்" “சஹ்ரானின் தாக்குதலுக்கு அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை லத்தீப் கலைத்துள்ளார்" Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.