சட்ட விரோதமாக வசித்து வந்த ஒரு குடும்பத்தைப் பற்றி அறிய திடீர் விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் சிக்கியவை...


வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த சென்ற வெள்ளிக்கிழமை (10)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குள் சொந்தமான எம்பிலிப்பிட்டியவின் யோதகம கிராமத்தின் தலைமைத்துவ அபிவிருத்தி நிலையத்தின் 3 ஆவது மாடியில் சட்ட விரோதமாக வசித்து வந்த ஒரு குடும்பத்தைப் பற்றி அறிய திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


கடந்த கால அரசியல் தொடர்புகள் என்ற போலிக் காரணத்தால் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்ற போலிக் காரணத்தால் ஒரு குடும்பம் அந்த விரிவுரை மண்டபத்தில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இந்த விஜயத்தின் போது தெரிய வந்துள்ளது.


முன்னாள் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தனது நண்பர்களை அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆராயுமாறு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த பல சம்பவங்கள் முந்தைய அரசாங்கத்தால்  நடைபெற்றுள்ளன என்று தெரிய வந்துள்ளது.


இந்தச் சம்பவத்தில் தலைமைத்துவ அபிவிருத்தி நிலையத்தின் 3 ஆவது மாடியில் சட்ட விரோதமாக வசித்து வந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய தகவல்களை அறிய  அமைச்சர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள யோதகம கிராமத்திற்குச் சென்றார்.


அமைச்சர் மண்டபத்தை பார்வையிட்ட போது ருஹுனு திரிய அறக்கட்டளை என்று அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவருக்கும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளருக்கும்  அமைச்சருக்கும் இடையே சூடான வார்த்தைப் பிரயோகங்கள் நடைபெற்றது. இதையடுத்து எம்பிலிப்பிட்டிய காவல் நிலையத்தின் காவல்துறை தலைமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு  வரவழைக்கப்பட்டு இது குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இதில் குடியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விரிவுரை மண்டபம் மூன்று அறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் ஒரு கழிப்பறையைக் கொண்ட வீடாக மாற்றப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. வீட்டிற்குத் தேவையான அனைத்து தளபாடங்களும் தம்பதியிளரின் திருமணப் புகைப்படங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெனர்கள், கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகள் என்பன சம்பவ இடத்தில்  காணப்பட்டன. சமூக சேவைகள் செய்யும் நோக்கத்திற்காக இந்த மண்டபம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுரை எந்த சமூக சேவைத் திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை.

 குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி குடும்பம் ஒன்று தற்போது அங்கு வசித்து வருகின்றது. இரண்டு ஆண்டு குத்தகை காலாவதியாகி குத்தகை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. சொத்தை திருப்பித் தருமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அவர்களுக்கு கடிதம் அனுப்பிய போதும் அதற்கு அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

இந்த திடீர் விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய அமைச்சர், 'தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அரச சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த இடங்களை ஒரு மாதத்துக்கு பல முறை சென்று பார்க்கவுள்ளோம். ஆய்வுகள் மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இந்த தலைமைத்துவ அபிவிருத்தி நிலையம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய அரசியல் அதிகாரம் இவற்றில் எதையும் முறையாக நிர்வகிக்க அதிகாரிகளை அனுமதிக்கவில்லை.

இந்த அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் தேர்தல் சம்பந்தப்பட்டவைகளையே கண்டோம். இவர்கள் 2016 முதல் இங்கு தங்கி இருக்கிறார்கள். இருப்பினும் இது தொடர்பான வரி செலுத்தப்படவில்லை. இது அரச சொத்தின் தவறான பயன்பாடு. முன்னாள் வீடமைப்பு அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இது போன்ற பல விடயங்களை நாட பூராகவும் செய்துள்ளார். வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள கட்டிடங்கள் திணைக்களம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச தொழிற்சாலை போன்ற நிறுவனங்கள் அழிக்கப்பட்டுன்னள. பல நிறுவனங்கள் தங்கள் நண்பர்களை தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தியுள்ளன.

இந்த இடம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் குடும்பம் ஒன்று அங்கே குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பத்திற்கு பெலியத்த மற்றும் தங்கல்ல ஆகிய பிரதேசங்களில் இரு வீடுகள் உள்ளன. இந்தக் குடும்பத்தினருக்கு வாழ்வதற்கு இடங்கள் உள்ளன. இருப்பினும் இந்த அரச சொத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சராக இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பேன். இது தவிர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மீறப்பட்டுள்ளன. சொத்தை திருப்பித் தருமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்' என்றும் அமைச்சர் கூறினார்.

2020.01.13
ஊடகப் பிரிவு
சட்ட விரோதமாக வசித்து வந்த ஒரு குடும்பத்தைப் பற்றி அறிய திடீர் விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் சிக்கியவை... சட்ட  விரோதமாக வசித்து வந்த ஒரு குடும்பத்தைப் பற்றி அறிய திடீர் விஜயம்  மேற்கொண்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சரிடம் சிக்கியவை... Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.