இன்று முதல் 24 மணி நேரம் - வருடம் முழுதும் திறந்து வைக்கப்பட உள்ள மும்பை ஷாப்பிங் கம்பளாக்ஸ்.


இந்தியாவின் வர்த்தக தலைநகராகக் கருதப்படும் மும்பை இன்று முதல் தூங்கா நகரமாக மாறப்போகிறது.



ஒலுவில்  எம்.ஜே.எம் பாரிஸ்
இன்று முதல் மும்பையில்  மால், மல்டிபிளக்ஸ், கடைகள் என அனைத்தும் 24 மணிநேரமும் வருடம் முழுவதும் திறந்து வைத்து வர்த்தகம் செய்ய புதிய கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. பல வருடமாகப் பேசப்பட்டு வந்த 24 மணிநேர வர்த்தகம் இன்று முதல்  அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநில அரசாங்கம், இப்புதிய கொள்கையின் மூலம் வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்குப் பிரச்சனையும் உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை.



லண்டன் நகரத்தின் Night Economy மதிப்பு சுமார் £5 Billion ( சுமார் ஒரு லட்சத்தி 15 ஆயிரம் கோடி ) இதைக் கருத்தில் கொண்டு தான் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக இருக்கும் மும்பையில் முதல் முறையாக இதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




இதுகுறித்து இந்தியா மகாராஷ்டிர மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பேசுகையில்:-

மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் இவ் முடிவின் மூலம் மும்பையில் அதிகளவான வேலைவாய்ப்புகள், வருவாய் ஈட்டும் வழிகள் உருவாக்கும். அது மட்டுமல்லாமல் மும்பையின் வருவாய் அளவும் அதிகரிக்கும். மேலும் இத்திட்டத்தால் அடுத்த  வரும் சில வருடங்களில் மும்பை நகர சேவைத் துறையில் மட்டும் சுமார் 5 லட்ச வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.




இப்புதிய விதி அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டாயம் அனைத்து மால்கள், மல்டிபிளக்ஸ், உணவகங்கள் ஆகியவை திறக்கப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. யார் யாருக்கு அதிக வர்த்தகம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என ஆசையுள்ளதோ அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் மகாராஷ்டிர மாநில அரசாங்கம் விளக்கமாகத் தெரிவித்துள்ளது.




தற்போது 1ம் கட்டமாக வீட்டு குடியிருப்புகள் அதிகமிருக்கும் இடங்களைத் தவிர்த்து வெளிப்புற பகுதிகளில் இருக்கும் கடைகள், உணவகங்கள், மால்களில் இருக்கும் தியேட்டர்கள் மற்றும் மில் ஆகிய திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல் 24 மணி நேரம் - வருடம் முழுதும் திறந்து வைக்கப்பட உள்ள மும்பை ஷாப்பிங் கம்பளாக்ஸ். இன்று முதல் 24 மணி நேரம் - வருடம் முழுதும் திறந்து வைக்கப்பட உள்ள மும்பை ஷாப்பிங் கம்பளாக்ஸ். Reviewed by Madawala News on January 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.