வரி சலுகைகளின் எதிரொலி ; பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு

புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரிச் சலுகையை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி, பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.


அரசாங்கத்தின் இந்த வரிச் சலுகை காரணமாக பேக்கரி உரிமையாளர்களுக்குக்கு கூடுதலான நன்மை கிடைத்திருப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.


இந்த வரிச்சலுகை காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 50 ரூபாவால் குறைவடையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரி சலுகைகளின் எதிரொலி ; பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு வரி சலுகைகளின் எதிரொலி ; பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.